Invitation for Expression of Interest
- Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU), Nagapattinam proposes to
engage a reputed professional Operation and Maintenance Agency (OMA) for carrying out
operation and maintenance of FISH FREEZING INCUBATION FACILITY in Fish
Processing Incubation Facility, Keechankuppam for the year 2019-20.
உறைபதன தொழிநுட்ப வசதியை பயன்படுத்த விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தினுடைய மெட்ரோ மீன்பதன தொழில்நுட்பக்கூடம் கீச்சாங்குப்பம், நாகப்பட்டினத்தில் இயங்கி வருகின்றது. இந்த தொழில்நுட்ப கூடாரத்தில் உறைபதனம் செய்யும் வசதி, சூரிய கூடார உலர்த்தி, மீன் மதிப்பூட்டலுக்கான இயந்திரங்கள் மற்றும் தானியங்கி பையகப்படுத்தும் இயந்திரங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உறைபதனம் செய்வதன் மூலம் நீண்டநாள் கடல் பொருட்களை தரமுடன் பாதுகாக்க முடியும். இங்கனம் பிடிக்கப்பட்ட மீன் மற்றும் கடல்சார் பொருட்களை பனிக்கட்டியிட்டு தரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் 10 டன் கொள்முதல் அளவுள்ள குளிரூட்டும் அறை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உறைபதனம் செய்வதற்காக 1 டன் கொள்முதல் அளவுள்ள குளிர் காற்றின் மூலம் இயங்கக்கூடிய உறைபதன இயந்திரங்கள் உள்ளது. உறைபதனம் செய்த பொருட்களை சேமிப்பதற்கான 20 டன் கொள்முதல் உள்ள குளிர்பதன கிடங்கு வசதியுள்ளது. இம்மூன்று வசதிகளை பயன்படுத்தி மீன் மற்றும் கடல்சார் பொருட்களை நல்ல விலைக்கு தரமுடன் விற்க முடியும். ஆகவே விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், இவ்வசதியை பயன்படுத்த பல்கலைகழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 28.03.2019க்குள் கல்லூரி முதல்வருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்.விபரங்களுக்கு பல்கலைகழகத்தின் இணையதளம் மற்றும் 9994358736 எண்ணுக்கு தொடர்புகொண்டு பயனடையுமாறு மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜீ. ஜெயசேகரன் தெரிவித்தார்.