Demonstration cum Training Program on Fish Processing technologies

One day Demonstration cum training program on Fish Processing Technologies was conducted for the fisherwomen and entrepreneurs of Karaikal along with the Agricultural Technology Management Agency (ATMA) of Karaikal, who also sponsored for this training on 12th November 2019 at Fish Processing Incubation Facility, College of Fisheries Engineering, TNJFU, Nagapattinam. The program was inaugurated by Dr. K. Rathnakumar, Professor and Head, Department of Fish Process Engineering, College of Fisheries Engineering in which he spoke about the scope that are available in the fisheries sector.

Trainers were taught about scope and nutritional value of seafood products and the scope of various value added fishery products, hands on training on hygienic handling of fishes, retort processing of fish and prawn curry was given by Dr. N. Manimehalai, Associate Professor. Production of bakery products (fish incorporated cake, fish incorporated cookies) and production of extruded products (fish corn puff and fish pasta were demonstrated by Dr. P. Karthickumar. Trainees were also exposed to the various fish processing machinery and packaging techniques.

Valedictory session was headed by Dr. M. Rajkumar i/c, Dean, College of Fisheries Engineering, he encouraged the trainees to take this opportunity to learn the fish processing and value added technologies. Trainees gave feedback stating that they have gained lot of knowledge on how to manufacture the fish products in various methods that would be both attractive to the children and the customers. During the valedictory function, the training certificates were also distributed to the trainees. Finally the Vote of thanks was given by training coordinator Dr. P. Karthickumar, thanking all the dignitaries, the ATMA for sponsoring and for taking the initiative and efforts.

மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி

“மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி” வேளாண்மை தொழில்நுட்ப முகாமை (ஆத்மா) காரைக்கால் அமைப்பின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரி மீன்பதன தொழில்நுட்பக் கூடத்தில் 12.11.2019 அன்று நடைபெற்றது.  இப்பயிற்சியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ மகளிர் மற்றும் ஆடவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இத்திறன் மேம்பாட்டு பயிற்சியினை முனைவர். கு. ரத்னகுமார் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து மதிப்பூட்டப்பட் மீன் பொருட்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு சந்தைப் படுத்துதல் போன்றவற்றைப் பற்;றி சிறப்புறையாற்றினார்.

இப்பயிற்சியில் பங்கேற்ற மீனவ மக்கள் கடல்சார் உணவுப்பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பல்வேறு வகையான மதிப்புக்கூட்டப்பட்ட மீன் உணவுப் பொருட்களின் முக்கியத்துவம். மீன் மற்றும்; இறால் சமையலுக்கான ரிடார்ட் செயலாக்கமுறை பற்றி முனைவர் நா. மணிமேகலை இணை பேராசிரியர் அவர்கள் செயல் முறை விளக்கம் அளித்தார். மீன் கேக் மற்றும் மீன் பிஸ்கட் தயாரிக்கும் முறைகள் மற்றும் மீன் பாஸ்தா தயாரிக்கும் செயலாக்கமுறைகளை முனைவர் ப. கார்த்திக்குமார் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சிக்கு வருகை புரிந்தவர்கள் மீன் பதப்படுத்தும் இயந்திரங்களின் பயன்பாடுகள் மற்றும் பேக்கிங் செய்யும் தொழில் நுட்பங்களை அறிந்துகொண்டனர்.

பயிற்சியின் முடிவு விழாவில்;  முனைவர் மா. இரஜ்குமார் முதல்வர் (பொறுப்பு) மீன்வளப் பொறியியல் கல்லூரி அவர்கள் தலைமை தாங்கினார்.  இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பின்னூட்டமாக தாங்கள் கற்றுக்கொண்ட கடல்சார் உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் கற்றுக் கொண்ட முறைகள் உணவுப் பொருட்களை உருவாக்கும் முறைகள் அணைவரையும் கவரும் வண்ணமாக இருந்தது எனக் கூறினார். அடுத்தபடியாக பயிற்சியில் பங்கேற்றவர்க்;கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியின் நிறைவாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. கார்த்திக்குமார் நிகழ்ச்சியியல் பங்கேற்ற பிரமுகர்களுக்கும் நிதி உதவி அளித்த வேளாண்மை தொழில்நுட்ப முகாமிற்கும் நன்றி கூறினார்.