National Integration Day was observed jointly by the College of Fisheries Engineering and College of Energy and Environmental Engineering on 19th November, 2019 in view of the birth anniversary of former Prime Minister of India, Smt. Indira Gandhi. Dr. M. Rajakumar, Dean i/c of the College presided the event. In his speech, he insisted that all should follow unity in diversity and safeguard the countries pride. In the presence Dean of CoFE and Officer i/c of CEEE, Professors, students of CoFE and CEEE and office staffs took the National Integration Day Pledge.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீமதி, இந்திராகாந்தி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழி எடுத்துகொள்ளப்படுகிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழி எடுத்துகொள்ளப்பட்டது. இதில் மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் எம். ராஜகுமார், அவர்கள் முன்னிலையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் அவர் பேசுகையில் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையை கடைப்பிடித்து இந்திய நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.