National Constitution Day was observed in the College of Fisheries Engineering and College of Energy and Environmental Engineering jointly on 26th November, 2019. Dr. D. Kesavan, Assistant Professor and Head, Department of Basic Sciences of the College presided the event. In his speech, he enhanced that the Constituent Assembly was formed under the leadership of Babasaheb Bhim Rao Ambedkar and the draft Constitution of India was adopted on 26 November 1949. On this special day, the professors, students of CoFE and CEEE and office staffs took a pledge. The event was co-ordinated by Dr.M.Kamalakannan, Assistant Professor.
நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
நவம்பர் 26, 2019 அன்று மீன்வள பொறியியல் கல்லூரி மற்றும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் கல்லூரி இணைந்து தேசிய அரசியலமைப்பு தினமானது கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் அடிப்படை அறிவியல் துறையின் உதவி பேராசிரியரும் தலைவருமான முனைவர் தே. கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் கூறுகையில், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் இந்திய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது என்றும், இதன் நினைவாக இந்நாள் பாரத பிரதமர் மாண்புமிகு.நரேந்திர மோடி அவர்கள் 2015ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு தினமாக அறிவித்தார். இந்நன்னாளில் தேசிய அரசியலமைப்பு தின உறுதிமொழியை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு முனைவர்.கமலக்கண்ணன், உதவிப் பேராசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.