தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கும் மெட்ரோ மீன்பதன தொழில்நுட்பக்கூடமில் "பன்னடுக்கு பையில் பொதிந்து வெப்ப பதனம் செய்யப்பட்ட உடனடியாக உண்ணக்கூடிய மீன் குழம்பு" குறித்த செயல்முறை பயிற்சி 27.07.2021 முதல் 29.07.2021 வரை மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் நிதி உதவியோடு நடைபெற்றது. இப்பயிற்சி முகாமை மீன்வள பொறியியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நா. மணிமேகலை தொடங்கி வைத்து பேசுகையில் மீன்மதிப்பூட்டலின் முக்கியத்துவம் மற்றும் வருங்காலங்களில் மதிப்பூட்டிய உடனடியாக உண்ணக்கூடிய மீன் பொருட்களின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சி முகாமில் மீன்களை சுகாதாரமாக கையாளும் முறைகள், கடல் உணவுகளை பயன்படுத்தி எவ்வாறு மதிப்பூட்டிய பொருட்கள் தயார் செய்யும் முறைகள், பையகப்படுத்தும் முறைகள் மற்றும் பொதிந்து வெப்ப பதனம் செய்யும் முறைகள் பற்றியும் விரிவான செயல்முறை பயிற்சியை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவி பேராசிரியர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களால் அளிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி விமலாதேவி அவர்கள் வெப்பபதனம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை பற்றியும் முனைவர் அலமேலு அவர்கள் எவ்வாறு மதிப்பூட்டிய பொருட்களின் தர நிர்ணயம் செய்வது பற்றி எடுத்துரைத்தனர். இப்பயிற்சியில் நாகூர், வாஞ்சூர் மற்றும் நாகையை சேர்ந்த இருபது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பங்கு கொண்டு பயனடைந்தனர். பயனாளிகள் மதிப்பூட்டிய மீன்பொருட்களில் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடம் உறுதுணையாக இருக்கும் என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் உறுதியளித்தார்.
Three Days Training cum demonstration Programme on Ready to Serve Fish Curry in Retortable Pouches (27.07.2021 – 29.07.2021)
Three Days Training cum demonstration Programme on Ready to Serve Fish Curry in Retortable Pouches was conducted for the unemployed youths which was sponsored by ICAR Centre Institute of Fisheries Technology, Cochin under SC-SP component during 27 th July to 29 th July 2021 in Fish Processing Incubation Facility, Off campus of College of Fisheries Engineering, TNJFU, Nagapattinam. Dr. N. Manimehalai, Dean i/c, College of Fisheries Engineering, inaugurated the training cum demonstration program and emphasize the importance of fish processing and scope for the production of value added fishery products. Special guest lectures about Do’s and Don’ts in Retort processing given by Mrs. Vimaladevi, Asst. Professor, Dr. MGR FC&RI, College, Thalainayeru and Food quality requirements for value added products given by Dr. V. Alamelu, Asst. Professor, Dr. MGR FC&RI, College, Thalainayeru. Dr. P. Karthickumar demonstrated the hygienic handling of fishes, operation of retort processing unit, packaging methods and production of ready to eat value added fish products to the beneficiaries. Beneficiaries werealso exposed to the various fish processing machinery and packaging techniques that present in the FPIF, CoFE. During valedictory session, trainees were instructed to make use of the established facility for their initial start-ups and improve their economic status.