The Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University Foundation Day 2021 was celebrated through virtual mode in College of Fisheries Engineering, Nagapattinam on 19.06.2021. A warm welcome was given by Join Secretary of Students’ Association Mr. S. Evon Umesh. The presidential address was delivered by Vice President of Students Association Dr. N. Manimehalai, she stated the developments of our University from the scratch. The guest lecture was delivered by Mr. B. Prabakaran, Assistant General Manager, NABARD, Nagapattinam on the topic “Funding support from banking sector & government of India for fisheries promotion”. To mark this event Online Quiz competition also conducted via Google forms. Students have actively participated in the Online Quiz competition. Approximately 108 students have participated from 18 colleges all over in India. The winner of the competition was Ms. S. Kavya & Ms. M. Erahavi – II Year (1 st prize) CoFE, Nagapattinam and Ms. A. Testimony – IV Year (2 nd prize) FC & RI, Tuticorin. Finally Ms. S. Elsiya III Year B.Tech (FE) proposed the Vote of thanks. The event was organized by Tamil Peravai club of CoFE student Association.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நிறுவன தினம் 2021 மீன்வள பொறியியல் கல்லூரியில் இணைய வாயிலாக ஜீன் 19, 2021 அன்று கொண்டாடப்பட்டது. மாணவர் சங்கத்தின் இணை செயலாளர் திரு. சி. இவான் உமேஷ் அவர்களால் அன்பான வரவேற்புரை அளிக்கப்பட்டது. முதன்மை உரையை மாணவர் சங்கத்தின் துணை தலைவர் முனைவர் நா. மணிமேகலை பேசுகையில் மீன்வளப் பல்கலைக்கலகத்தின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். விருந்தினர் உரையை NABARD வங்கியின் உதவி பொது மேலாளர் திரு. B. பிரபாகரன் எடுத்துரைத்தார். அவர் மீன்வள மேம்பாட்டிற்காக வங்கித் துறை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி என்னும் தலைப்பில் தனது உரையை ஆற்றினார். விரிவுரையைத் தொடர்ந்து கூகிள் படிவங்கள் வழியாக ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. ஆன்லைன் வினாடி வினா போட்டியில் மாணவர்கள் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள 18 கல்லூரிகளில் இருந்து சுமார் 108 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர் செல்வி S. காவியா & செல்வி M. இராகவி – இரண்டாம் ஆண்டு (1 வது பரிசு) மீன்வளப் பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம் மற்றும் செல்வி A. டெஸ்டிமோனா – நான்காம் ஆண்டு (2 வது பரிசு) மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி. இறுதியாக மூன்றாம் ஆண்டு B,Tech (மீன்வளப் பொறியியல்) செல்வி.சோ.எல்சியா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியை தமிழ்ப் பேரவை சங்கத்தினர் ஒருங்கிணைந்து நடத்தினர்.