Celebration of Sadbhavana Diwas Day at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam.

College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries University, Nagapattinam celebrated Sadbhavana Diwas in view of the birth anniversary of former Prime Minister of India, Sri Rajiv Gandhi. Dr. S. Balasubramanian, Dean of the College preside the event. In his speech he elaborated that India's former Prime Minister Shri Rajiv Gandhi’s government was instrumental in promotion good governance, national integration, peace, national integrity, love, affection and ethnic and religious harmony among the people of India. In the presence Dean of the College, Professors, students and office workers took the Sadbhavana Diwas Pledge The co-ordinator of this event, Dr. M. Kamalakannan, Assistant Professor, thanked the gathering.

 

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் சத்பவனா திவாஸ் தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் சத்பவனா திவாஸ் தினம் கொண்டாடப்பட்டு சத்பவனா திவாஸ் தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்படுகிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் சத்பவனா திவாஸ் தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இதில் மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். சி. பாலசுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சத்பவனா திவாஸ் தின உறுதிமொழி எடுத்துகொண்டனர். மேலும் அவர் பேசுகையில் இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்களது அரசாங்கத்தின் குறிக்கோள்கள்களான மற்றவர்களுக்கு நல்ல உணர்வுகளைத் தருவது, தேசிய ஒருங்கிணைப்பு, சமாதானம், தேசிய ஒருமைப்பாடு, அன்பு, பாசம் மற்றும் இன, மத நல்லிணக்கத்தை அனைத்து இந்திய மக்களிடையே ஊக்குவிப்பதற்காக இருந்தது என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மே.கமலகண்ணன், உதவி பேராசிரியர், கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.