On 21.06.2023, International Yoga Day was celebrated in College of Fisheries Engineering, Nagapattinam. Dr.N.Manimehalai, Dean i/c, presided over the event and elaborated on the benefits of yoga. Chief Guests Mr.M.Selvaraj, Secretary, Mr.S.Senthil, Yoga Trainer, Mrs. Sridevi Sathiyabalan, Yoga Trainer from Manavalakalai Mandram, Karaikal discussed the benefits of yoga and gave fundamental yoga training to the College students. About 50 students participated in this event. Dr.D.Kesavan, Staff Advisor, Er.P.Muthukrishnan, Member, and Ms.Jeyanthi, Secretory of Happiness and Yoga Club of the College coordinated the event.
சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
21.06.2023 அன்று சர்வதேச யோகா தினமானது நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.நா. மணிமேகலை அவர்கள் தலைமையேற்று யோகாவின் முக்கியத்துவத்தையும் வாழ்வில் அதன் பங்களிப்பையும் மாணவர்களுக்கு விவரித்தார். இதனையடுத்து சிறப்பு விருந்தினர்களான காரைக்கால் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த மன்றத்தின் செயலாளர் திரு.எம்.செல்வராஜ் மற்றும் யோகா பயிற்றுனர்கள் திரு.எஸ்.செந்தில், திருமதி. ஸ்ரீதேவி சத்தியபாலன் ஆகியோர் மீன்வள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு யோகக் கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து யோகாவின் அடிப்படை பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மகிழ்ச்சி மற்றும் யோகா சங்கத்தின் ஆசிரிய ஆலோசகர் முனைவர்.கேசவன், உறுப்பினர் திரு.முத்துகிருஷ்ணன், மற்றும் செயலாளர் செல்வி.ஜெயந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.