Foundation Day Celebration

On 19.06.2023,  Foundation Day of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University was grandly celebrated by the College of Fisheries Engineering, Nagapattinam. As a marking of the 12th Foundation Day of the University, online competitions such as Essay Writing in Tamil and English and drawing in the theme of 'Blue Revolution'. More than 100 students participated in the online competitions. More than 130 school students from in and around Nagapattinam  and Karaikal districts visited the College campus as a part of 'Open Day'. Furthermore, the school students studying in the GHSS in Muttam - an adopted village under UBA, were given awareness on fisheries education and opportunities. In addition, a Guest Lecture programme was presided by Dr.N.Manimehalai, Dean i/c, CoFE. Dr.G.K.Dinakaran, Senior Scientific Officer, MPEDA-RajivGandhi Center for Aquaculture (RGCA), Karaikal, has delivered a guest lecture with emphasis on 'Profitable Aquaculture'. At the end of the day, the school students were given the award certificates for online competitions. The events were coordinated by Dr.D.Kesavan, Assistant Professor, Dr.M.Ramar, Assistant Professor, and Dr.Mohd Tanveer, Associate Professor.

பல்கலைக்கழக நிறுவன தின விழா

19.06.2023 அன்று தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழா நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் 12வது நிறுவன தினத்தை முன்னிட்டு, 'நீலப் புரட்சி' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற இணையவழி போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இணையவழி போட்டியிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கல்லூரியின் ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகளை பார்வையிடும்  'திறந்த நாள்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்தனர். மேலும், மேம்பட்ட இந்திய பிரச்சாரம் திட்டத்தின் கீழ்  தத்தெடுக்கப்பட்ட கிராமமான முட்டத்தில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மீன்வளக் கல்வி மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர்.நா.மணிமேகலை தலைமையில் ஒரு சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்காலில் உள்ள ராஜீவ்காந்தி மீன் வளர்ப்பு மையத்தின் மூத்த அறிவியல் அதிகாரி முனைவர் ஜி.கே.தினகரன், 'லாபமான மீன்வளர்ப்பு' குறித்து சிறப்புரையாற்றினார். இறுதியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையவழி போட்டிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை உதவிப் பேராசிரியர் முனைவர் தே.கேசவன், உதவிப் பேராசிரியர் முனைவர் மா.இராமர், மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் முகமது தன்வீர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.