Observation of National Integration Day at College of Fisheries Engineering, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam

College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries University, Nagapattinam observed National Integration Day on November 19, 2018 in view of the birth anniversary of former Prime Minister of India, Smt. Indira Gandhi. Dr. G. Jeyasekaran, Dean i/c of the College presided the event. In his speech, he enhanced that India's former Prime Minister Smt. Indira Gandhi’s government was instrumental in promotion good governance, national integration and love among the people of India. In the presence Dean of the College, Professors and office workers took the National Integration Day Pledge.

 

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீமதி, இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்பட்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்படுகிறது. நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. இதில் மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். G. ஜெயசேகரன், அவர்கள் முன்னிலையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி எடுத்துகொண்டனர். மேலும் அவர் பேசுகையில் இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீமதி, இந்திரா காந்தி அவர்களது அரசாங்கத்தின் குறிக்கோள்கள்களான இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே உள்ள அன்பையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதாக இருந்தது என்று அறிவுரை வழங்கினார்.