"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
The Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF), Ramanathapuram, a constituent unit of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized a one-week training program on “Boat Driver License Certificate Course” from 22.09.2025 to 28.09.2025. The program was funded by the Tamil Nadu Skill Development Corporation (TNSDC), Chennai under the Naan Mudhalvan Vetri Nichayam scheme. A total of 13 fishermen from Ramanathapuram district participated in the training. Upon successful completion, all trainees were awarded licenses by the Department of Fisheries and Fishermen Welfare, Ramanathapuram. The training covered a wide range of essential topics including the handling of navigational equipment such as GPS, Fish Finder, AIS, VHF, MF, as well as chart work, navigational signals, rules of the road, and life-saving appliances. Participants also received hands-on training in marine engine and gearbox maintenance, lathe and welding operations, navigational simulators, and onboard safety procedures. Practical demonstrations were conducted by scheme investigators and invited subject matter specialists on topics such as marine meteorology, first aid at sea (by a medical professional from Uchipuli), and firefighting techniques (by an officer from the Tamil Nadu Fire and Rescue Services, Ramanathapuram). The program was well-coordinated with active involvement from the university's staff and students, who played a key role in organizing the training sessions and concluding function.
நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தில் கீழ் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் நடத்தும் “படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் பயிற்சி” என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 22.09.2025 முதல் 29.09.2025 வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 13 மீனவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். 13 மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமமானது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியின் போது கடல்சார் மின்னனுச் சாதனங்களைக் கையாளுதல், உலகளாவிய இருப்பிடம் காட்டி (ஜி.பி.எஸ்) மற்றும் மீன் கண்டுபிடிப்பான்கள் செயல்முறை விளக்கம், மாலுமிக்கலை வரைபடங்கள், மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், ஆழ்கடல் மாலுமிக்கலை செயல்முறை விளக்கம், கடைசல் பனிப்பட்டறை இயந்திர செயல்முறை விளக்கம், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் வானிலை, தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், கடல் எஞ்சின் பராமரிப்பு செயல்முறை விளக்கம், பாதுகாக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் மீனவர்களுக்கு பயன்தரும் வகையில் வழங்கப்பட்டது.
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.