"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"
As per the telephonic communication from the District Coordinator of EDII, Ramanathapuram, it has been noted that a total of 9,235 ideas were submitted by students from various colleges across disciplines such as Engineering, Agriculture, Fisheries, Arts, Science, and Polytechnic under the TNEDII initiative. Out of these, 180 innovative ideas were shortlisted by the TN EDII, Chennai. Among them, four innovative ideas related to fishing technology, submitted by B.Voc. (IFT) students, were selected for Levels 1 and 2. These include:
1. Cable Glide Way
2. Solar Battery-Operated Boat
Of these two, the "Cable Glide Way" idea secured the 10th position in the first-prize category of the state-level HACKATHON 2023 competition, earning a cash award of Rs. 1,00,000/- along with 20 student groups across the state. The award distribution ceremony was held at Anna University, Chennai, on 11th November 2024. The Honorable Minister, Mr. T.M. Anbarasu, Minister for Micro, Small, and Medium Enterprises, graced the event as the chief guest and presented a cash award of Rs. 1,00,000/- in the form of a cheque to the student group. Additionally, the "Solar Battery-Operated Boat" was selected in the 100th position category and awarded a cash prize of Rs. 4,950/-.
இராமநாதபுரம் மாவட்ட தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொடர்பின்படி, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் போன்ற துறைகளைக் கையாளும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 9,235 புதிய கண்டுப்பிடிப்புக்கான ஆராய்ச்சிக்களை சமர்ப்பித்தனர். அவற்றில் 180 புதுமையான கண்டுப்பிடிப்புக்கள் சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தினால் தேர்ந்தெடுத்து பட்டியலிடப்பட்டன. அவற்றில் தொழில்சார் மீன்பிடி இளங்கலை மாணவர்கள் மீன்பிடித் தொழில்நுட்பத்தில் 4 புதுமையான ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட 4 ஆராய்ச்சிகளில் 2 ஆராய்ச்சிகள் நிலை 1 மற்றும் நிலை 2 இல் தேர்ந்தெடுக்கப்பட்டன,
அவையான
1. தானியங்கி தொங்குக் கயிறுப் பெட்டி
2. சூரிய மின்கலத்தால் இயக்கப்படும் மீன்பிடிப் படகு
மாணவர் புதுமைக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில், 20 மாணவர் குழுக்களை உள்ளடக்கிய ரூ.1,00,000/- ரொக்கப் பரிசுடன், முதல் பரிசுப் பிரிவில் 10வது இடத்தில் “தானியங்கி தொங்குக் கயிறுப் பெட்டி” ஆராய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. விருது வழங்கும் விழா சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 11, 2024 அன்று நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி.எம். அன்பரசு, இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர் குழுவிற்கு காசோலையாக ரூ. 1,00,000/- ரொக்க விருதை வழங்கினார். மேலும், மாணவர் புதுமைக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில், ஹேக்கத்தான் 2023 இல், 100 எண் பிரிவின் கீழ் ஒரு ‘சூரிய மின்கலத்தால் இயக்கப்படும் மீன்பிடிப்படகு’ 4,950/- ரொக்கப் பரிசுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Directorate of Incubation and Vocational Training in Fisheries (DIVF),
Ariyaman Beach,
Ramanathapuram – 623 519.