Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

Training programme with the collaboration of DFPT, Dr. M.G.R FC & RI, Ponneri and NFDB, Hyderabad

Department of Fish Processing Technology has organized three days training programme on “Production, Packing, Quality Control and Marketing of Value added Aquatic food products” with the funding support of National Fisheries Development Board, Hyderabad under Pradhan Manthiri Sambada Yojana Scheme (PMMSY) at Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri from 22.09.21 to 24.09.21. Dr. B. Ahilan, Dean i/c inaugurated the training programme and insisted the importance of training on the production of value added fish products. Dr. D. Manikandavelu, HOD, DAEM has welcomed the participants and motivated them to become an entrepreneur in fisheries sector. Faculties and resource persons from various fields have delivered a lecture and demonstrated the process methods. Twenty five participants from Palakkad, Coimbatore, Nagappattinam, Thanjavur, Mamallapuram, Chengalpattu, Chennai, Minjur and Ponneri regions were attended the programme and benefitted. Mrs. Nimish Mol Stephen, HOD, DFPT has organized the programme.

டாக்டர். எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்பதன தொழிற்நுட்ப பயிற்சி

மீன்பதன தொழிற்நுட்பத் துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டத்தின் நிதியுதவியுடன், பொன்னேரியிலுள்ள டாக்டர். எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மதிப்பூட்டிய மீன் உணவுப் பொருட்களின் உற்பத்தி, பையகப்படுத்துதல், தரக் கட்டுப்பாடு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான இலவச செயல்முறை பயிற்சியை கல்லூரி முதல்வர் பேராசிரியர். ப. அகிலன் 22.09.21 அன்று தொடங்கி வைத்தார். முனைவர். த. மணிகண்டவேலு பங்கேற்பாளர்களை வரவேற்று, மீன் உணவுத் துறையில் தொழில்முனைவோராக ஊக்குவித்தார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரான திருமதி. நிமிஷ் மோள் ஸ்டீபன் இந்த மூன்று நாள் 22.09.2021 – 24.09.2021] பயிற்சியில், மீன்களிலுள்ள ஊட்டச்சத்துக்கள், மீன்களை சுகாதாரமாகக் கையாளும் முறைகள், எக்ஸ்ரூடர் மீன் மற்றும் இறால் உணவு சிற்றுண்டி தயாரித்தல், மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரித்தல், மீன் மற்றும் இறால் உணவு அடுமனை பொருட்கள் தயாரித்தல் மற்றும் தர பரிசோதனை, தரச்சான்றிதழ் பெறும் வழிமுறைகள் போன்றவற்றை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் செயல்முறைகளை குறித்து விளக்கினர். மீன் பதன தொழில்முனைவிற்கு எவ்வாறு கடனுதவி மற்றும் மானியம் பெறுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். இப்பயிற்சியில் பாலக்காடு, கோவை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, சென்னை, மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் இருந்து 14ஆண்கள் மற்றும் 11 பெண்கள் என மொத்தம் 25 பேர் பங்கேற்றனர்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in