Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

NSS - Vigilance Awareness Rally at Dr.MGR.FCRI, Ponneri on 29.10.2021

Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri organized “Vigilance Awareness Rally” on 29.10.2021

NSS unit of Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri have organized the “Vigilance Awareness Rally” on 29.10.2021 at Ponneri in commemoration of Vigilance Awareness week (26.10.2021 to 01.11.2021) and 75 th Anniversary of India's Freedom. The rally was inaugurated and lead by Mr.P. Selvam, Revenue Divisional officer, Ponneri in the presence of, Dr. B. Ahilan Dean i/c and theme of the rally is to avoid bribe and corruption. First year and Post graduate students of Dr.MGR FCRI, Ponneri with all the COVID-19 precautions [wearing mask and using sanitizer] actively participated in the rally to impart the awareness to the general public about responsibilities of the Indian Citizens and government officials prohibition of bribe and corruption. The awareness rally started from the college main gate and ended by returning to college by covering Ponneri Town. Mr. R. Velmurugan, NSS Programme officer and Assistant Professor, organized and coordinated the entire programme.

 

 

பொன்னேரி, டாக்டர். எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் - நாட்டு நலப்பணித் திட்ட குழுவினர் மூலம் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா மற்றும் 75 வது இந்திய சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 29.10.2021 அன்று நாட்டு நலப்பணித் திட்ட குழுவினரால் 75 வது இந்திய சுதந்திர தின ஆண்டு விழா மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் (பொ) முனைவர். ப. அகிலன் அவர்கள் முன்னிலையில், திரு. ப. செல்வம், பொன்னேரி வருவாய் கோட்டாச்சியர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு தொடர்பான கருத்துகள் கொண்ட பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி காலை 10.00 மணியளவில் தொடங்கி, கல்லூரி வளாகத்தில் இருந்து பொன்னேரி பேரூராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், சந்தை வழியாக சென்று சுமார் 11.00 மணியளவில் மீண்டும் கல்லூரி வளாகத்திற்கே வந்தடைந்தனர். அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பொன்னேரி காவல் நிலைய காவல் அதிகாரிகள் பேரணியில் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகளைப் மேற்க்கொண்டனர். திரு. ரா. வேல்முருகன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in