Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

National Fish Farmers Day Celebration

National Fish Farmers Day 2022 was celebrated at the Seminar Hall of Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri on 11.07.2022. Dr. Cheryl Antony, Professor and Head, Department of Aquaculture welcomed the gathering and farmer speakers of the day. She also highlighted on the importance of observing fish farmers day. Dr. P. Chidambaram, Professor, Department of Aquaculture delivered a talk on role and facilities of TNJFU and Dr. M.G.R FC&RI, Ponneri on supporting fish farming activities. He also highlighted on ongoing research activities in TNJFU centers. The farmer speakers, Mr. Kumaran from Kattupally and Mr. Elaiyan from Pazhverkadu spoke elaborately on their experiences in shrimp farming and mud crab farming, respectively. Mr. Kumaran shared the technical and commercial problems in shrimp broodstock purchase and seed production and emphasized on the great need of qualified professionals to work in the sector. Mr. Elaiyan indicated the problems in crab fattening and on importance of crab fattening as an enterprise. Dr. S. Selvaraj, Assistant Professor proposed the vote of thanks thanking the organizer and guest speakers of the day. He also thanked the student participants. Dr. S. Selvaraj and Dr. V. Ezhilarasi, Department of Aquaculture coordinated the event.

தேசிய மீன்வளர்ப்போர் தின விழா

தேசிய மீன் வளர்ப்போர் தின விழா டாக்டர். எம். ஜி.ஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பொன்னேரி வளாகத்தில் 11.07.2022 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முனைவர். செரில் ஆண்டனி, பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்வளர்ப்பியல் துறை, மீன் விவசாயிகள் மற்றும் பேச்சளர்களை வரவேற்று தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து முனைவர். பு.சிதம்பரம், பேராசிரியர் அவர்கள் மீன்வளர்ப்பில் டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர்.எம். ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பங்கு குறித்து விவரித்து உரையை நிகழ்த்தினார். அடுத்ததாக, காட்டுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இறால் விவசாயி திரு. குமரன் மற்றும் பழவேற்காடு கிராமத்தை சேர்ந்த நண்டு விவசாயி திரு. இளையன் ஆகியோர் இறால் வளர்ப்பு மற்றும் களி நண்டு வளர்ப்பில் தங்களின் அனுபவங்களை மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்தனர், மற்றும் திரு. குமரன் அவர்கள் இறால் வளர்ப்பு, கொள்முதல் மற்றும் விதை உற்பத்தியில் உள்ள தொழில் நுட்ப மற்றும் வணிக சிக்கல்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இத்துறையில் பணிபுரிய தகுதி வாய்ந்த நிபுணர்களின் பெரும் தேவையை வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, திரு. இளையன் அவர்கள் நண்டு கொழுப்பேற்றுதலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார் இறுதியாக, சே.செல்வராஜ், உதவிப்பேராசிரியர் மற்றும் வெ.எழில்அரசி உதவிப்பேராசிரியர் சிறப்பு பேச்சாளர்களுக்கு நன்றியுரையை வழங்கினார். மேலும் இவ்விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in