Dr. M.G.R. Fisheries College and Research Institute, Ponneri

Latest News:

HON’BLE TAMIL NADU FISHERIES MINISTER VISITS TNJFU MADHAVARAM CAMPUS

Hon’ble Minister of Fisheries and Fishermen welfare, Government of Tamil Nadu, Th. Anitha R. Radhakrishnan visited TNJFU Madhavaram campus with M.L.A of Madhavaram, Th. S. Sudharshanam on 19.07.2022. Dr. B. Ahilan, Dean, Dr. MGR Fisheries College and Research Institute, Ponneri welcomed the dignitaries and gave overview about TNJFU Madhavaram Campus. At first, the Hon’ble Minister visited State referral laboratory of Aquatic Animal Health Management (SRLAAHM), where its activities were briefed by Dr. A. Uma, Professor and Head, SRLAAHM. The Hon’ble Minister then visited the aquaponics unit and Multi species ornamental fish hatchery of Advanced Research Farm Facility (ARFF). The operation of these facilities were explained in detail to the Hon’ble Minister by Dr. K. Ravaneswaran, Professor & Head, ARFF and Dr. Mahadevi, Assistant Professor, ARFF. In addition to ornamental fishes, the Minister were shown different types of food fishes such as GIFT (Tilapia), Red Pacu (Roop-chand), Red Tilapia and Pangasius cultured at ARFF. Following this, Hon’ble Minister visited the Aquatic Rainbow Mall where Dr. B. Ahilan, Dean, Dr. MGR. FC & RI, Ponneri explained the concept of the project and also discussed the issues related to Aquatic Rainbow Mall. Hon’ble Minister suggested few ideas for attracting the public for effective utilization of Aquatic Rainbow Mall. Dr. B. Ahilan, Dean, Dr. MGR. FC & RI, Ponneri thanked Hon’ble Minister and M.L.A of Madhavaram for their visit and valuable suggestions.

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பல்கலைக்கழக மாதவர வளாகத்தை பார்வையிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு, அனிதா R. ராதாகிருஷ்ணன் அவர்கள், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு, S. சுதர்சனத்துடன் மீன்வள பல்கலைக்கழக மாதவர வளாகத்தை 19.07.2022 அன்று பார்வையிட்டார். பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர். B. அகிலன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை வரவேற்று பல்கலைக்கழக வளாகத்தை குறித்து எடுத்துரைத்தார். முதலில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வளாகத்தினுள் அமைந்துள்ள மாநில நீர்வாழ் உயிரின நல மேலாண்மை ஒப்புமை ஆய்வகத்தை பார்வையிட்டார். இவ்வாய்வகத்தின் செயல்பாடுகளைக் குறித்து ஆய்வகத்தின் தலைவர் பேராசிரியர் A. உமா எடுத்துரைத்தார். பின்னர், வளாகத்தின் அதிநவீன ஆராய்ச்சி பண்ணை வசதியில் உள்ள அக்வாஃபோனிக்ஸ் மற்றும் பல்இன வண்ணமீன் குஞ்சு பொறிப்பகத்தை மாண்புமிகு அமைச்சர் பார்வையிட்டார். இவ்வசதிகளின் இயக்க செயல்பாடுகளை குறித்து அதிநவீன ஆராய்ச்சி பண்ணை வசதியின் தலைவர், பேராசிரியர், K. ராவணேஷ்வரன் மற்றும் உதவி பேராசிரியர் மகாதேவி அமைச்சரிடம் மிகத்தெளிவாக எடுத்துரைத்தனர். பல்இன வண்ணமீன்களுடன் அதிநவீன ஆராய்ச்சி பண்ணை வசதியில் உற்பத்தி செய்யப்படும் கிஃப்ட் திலேப்பியா, ரூப் சந்த், சிகப்பு திலேப்பியா மற்றும் பங்சேஷியஸ் போன்ற உணவு மீன்களும் அமைச்சரிடம் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வண்ணமீன் வானவில் விற்பனை வளாகத்தை பார்வையிட்டார். இவ்விற்பனை வளாகத்தின் கருத்துரு மற்றும் செயல்பாட்டில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் குறித்து மாண்புமிகு அமைச்சரிடம் பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் அவர்கள் எடுத்துரைத்தார். எடுத்துரைக்கப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கான சில தீர்வுகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிந்துரைத்தார்கள். அப்பரிந்துரைகளுக்காகவும், பல்கலைக்கழக வளாக வசதிகளை பார்வையிட வந்தமைக்காகவும் பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் அவர்கள் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

Contact info

The Dean
Dr. M.G.R Fisheries College and Research Institute
Ponneri - 601 204 Thiruvallur District,
Tamil Nadu, India.

044 - 2797 1556  |  044 - 2797 1557

deanfcriponneri@tnfu.ac.in