Latest News:

Two Days Workshop On “Modern Technology In Vannamei Shrimp Culture” Inaugurated At Fisheries College And Research Institute, Thoothukudi On 06.03.2019

A two day workshop on “Modern Technology in Vannamei Shrimp Culture” inaugurated at Fisheries College and Research Institute, Thoothukudi. This workshop will be conducted from 06.03.2019 to 07.03.2019. A total of 25 participants from V.O.C. College, Thoothukudi were participated in this workshop. The topics such as current status of shrimp farming in India, Biology of P.Vannamei, common diseases, site selection for farming, pre and post stocking management, feeding management, water quality parameters monitoring and management, harvesting techniques and BMP in shrimp farming would be dealt with the demonstration. The field exposure with hands-on training on various farming practices will be taught at a shrimp farm.

In the inaugural function, Mr.K.S.Vijay Amirtharaj, Assistant Professor and Head i/c, Department of Aquaculture and MRFF, Tharuvaikulam offered welcome address. Dr. Radhika Veerabahu, Professor and Head, Dept. of Zoology, V.O.C. College, Thoothukudi offered the chief guest address and she motivated the participants to gain the knowledge on modern technologies in shrimp farming. Dr.P.Velayutham, Dean inaugurated the workshop and addressed the trainees. In his presidential address, he highlighted the current status of shrimp farming, increased production and its benefit. Besides, he pointed out that the participants should become a great entrepreneur in the shrimp industry. Finally, Dr.G.Arul Oli, Assistant professor, Dept. of Fisheries Extension, Economics and Statistics proposed vote of thanks.

 

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்; “வனாமி இறால் வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப முறைகள்” என்ற இரண்டு நாள் பணிபட்டறை (06.03.2019 முதல் 07.03.2019 வரை) துவங்கப்பட்டது

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன்வளர்ப்புத்துறையின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி மூலமாக “வனாமி இறால் வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப முறைகள்” என்ற இரண்டு நாள் பணிபட்டறை (06.03.2019 முதல் 07.03.2019 வரை) துவங்கப்பட்டது. இந்த பணிபட்டறையில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியைச் சேர்ந்த இளங்கலை மாணவர்கள் மொத்தம் 25 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் இறால் வளர்ப்பு பண்ணை முறைகளில் முக்கிய பாடங்களான : இந்திய வனாமி இறால் வளர்ப்பில் தற்போதைய நிலை பினேயஸ் வனாமி யின் உயிரியல் வனாமி இறால்களுக்கான நோய்கள் பண்ணைக்கான இடத்தேர்வு இருப்பு செய்தல் முறைகள் உணவு மேலாண்மை முறைகள் நீர்த்தர மேலாண்மை முறைகள் அறுவடை முறைகள் மற்றும் பண்ணை உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள் போன்ற பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் நடத்தப்படும். மேலும்இ பயிற்சியாளர்களுக்கு களப்பயிற்சிகள் இறால் பண்ணையில் வைத்து அளிக்கப்படும்.  
இந்நிகழ்சியின் துவக்கவிழாவில் திரு.க.சே.விஜய் அமிர்தராஜ், உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) மீன்வளர்ப்புத் துறை மற்றும் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளம் வரவேற்புரை ஆற்றினார். இப்பணிப்பட்டறை துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் ராதிகா வீரபாகு பேராசிரியர் மற்றும் தலைவர் விலங்கியியல் துறை வ.உ.சி. கல்லூரி தூத்துக்குடி அவர்கள் பங்கேற்று பணிப்பட்றையில் பங்கேற்போரை ஊக்குவித்தார். இப்பணிப்பட்டறையினை மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர் ப. வேலாயுதம் அவர்கள் துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். அவர்தம் தலைமை உரையில் தற்போதைய இறால் வளர்ப்பு உற்பத்தி நிலவரம்; மற்றும் அதன் ஆதாயம் குறித்து குறிப்பிட்டார். மேலும் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் காலங்களில் சிறந்த இறால் வளர்ப்பு தொழில் முனைவோராக உருவாகுதல் வேண்டும் என்றும் அதன் மூலம் மிகுந்த இலாபம் பெற வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் இறுதியாக முனைவர் கோ. அருள் ஒளி உதவிப்பேராசிரியர் மீன்வள விரிவாக்கம் பொருளியியல் மற்றும் புள்ளியல் துறை நன்றியுரை வழங்கினார்