Latest News:

NSS Unit of Fisheries College and Research Institute, Thoothukudi Organised an Cleaning Drive at Port Trust Beach, Thoothukudi

The NSS unit of Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent college of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized Awareness cum cleaning drive at Port Trust Beach on 10.03.2019. Dr.P.Velayutham, Dean, Fisheries College and Research Institute inaugurated the cleaning drive and stressed the importance of keeping the beaches clean. He also requested the gathering to support the Government of Tamil Nadu Initiative “Plastic Free Tamil Nadu”. He also briefed the potential threat behind the plastic littering to the marine living organisms.

Total 80 NSS volunteers of this college turned out to the beach.  The participants removed garbage, debris and non-bio degradable materials found on the beach which, in turn motivated local populace towards maintaining a clean environment. Further, the NSS volunteers created “Sand Arts” on the theme “Plastic Free Tamil Nadu” which attracted numerous beach visitors and appreciated the efforts of the student volunteers. Mr.T.Ravikumar, NSS programme officer/Assistant Professor of the institute coordinated the event.

 

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக “தூத்துக்குடி புதிய துறைமுகத்தை சுத்தம் செய்தல்” நடைபெற்றது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 10.03.2019 அன்று தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர்.ப.வேலாயுதம் அவர்கள் துவக்கி வைத்து பேசும்போது பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் “நெகிழி இல்லா தமிழகம்” உருவாக அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு புதிய துறைமுகத்தில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளான நெகிழிப் பை, மீன்பிடி வலைகள் போன்றவற்றை சுத்தம் செய்தனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கடற்கரையில் நெகிழி ஒழிப்பு சம்பந்தமான “மணல் ஓவியங்கள்” வரைந்து பொதுமக்களை ஈர்க்கும் வண்ணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் இந்த புதிய முயற்சியினை அனைவரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி திரு. த. ரவிக்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.