The NSS Unit of Fisheries College and Research Institute, Thoothukudi, a constituent college of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University organized a NSS special camp at Kurukattoor village of Thoothukudi district from 14.03.2019 to 20.03.2019. Forty eight NSS volunteers of 2016-17 B.F.Sc batch of this college stayed at Kurukattoor village and actively took part in the camp. The week long programme marked by creation of awareness on Dengue and Tuberculosis, village cleaning, school cleaning, canal deweeding, awareness on ornamental and carp fish farming, training on preparation of various fishery products such as fish samosa, fish bajji, fish ball, fish cutlet, awareness on total sanitation and hygiene, eye testing camp, general medical camp, veterinary camp, English tutoring, Yoga classes for school students, sports, cultural programmes, voter awareness programme such as Rally and Human chain, etc., were conducted.
As part of this one week programme, Dr. P. Velayutham, Dean i/c., Fisheries College and Research Institute, Thoothukudi inaugurated the Special Camp. Mr. Bala Harihar Mohan, Block Development Officer, Panchayat Union, Alwarthirunagari and Mr. M. Shanmuga Sundaram, Panchayath Clerk were also participated in the programme. Dr. P. Velayutham, Dean i/c in his presidential speech stressed the importance of NSS special camp. Mr. Bala Harihar Mohan, Block Development Officer, appreciated the efforts of the NSS Unit of Fisheries College and Research Institute, Thoothukudi in his felicitation address and requested to arrange such a programme more frequently in this village.
Voter Awareness Rally and Voter Awareness Rally & human chain were organized on 19.03.2019 and 20.03.2019 respectively.
Mr.T.Ravikumar, Assistant Professor and NSS Programme Officer, Fisheries College and Research Institute, Thoothukudi coordinated the entire camp. Mr. S.Gowtham, Student NSS Secretary proposed vote of thanks.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் குருக்காட்டுரில் சிறப்பு முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருக்காட்டுர் கிராமத்தில் 14.03.2019 முதல் 20.03.2019 வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் இக்கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மீன்வள இளங்கலை பயிலும் 48 மாணவ-மாணவிகள் ஒரு வார காலம் இக்கிராமத்தில தங்கியிருந்து நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஏழு நாள் சிறப்பு முகாமில் டெங்கு மற்றும் காசநோய் விழிப்புணர்வு, பள்ளிக் குழந்தைகளுக்கான ஆங்கில மற்றும் யோகா வகுப்புகள், கிராம மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், கிராம சுகாதார விழிப்புணர்வு, கெண்டை மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பு பயிற்சி, மதிப்பூட்டிய மீன் உணவுப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, இலவச கண் பரிசோதனை முகாம், பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர்(பொ). முனைவர் ப. வேலாயுதம் அவர்கள் சிறப்பு முகாமை துவக்கி வைத்து தனது உரையில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். திரு. பால ஹரிஹர மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து பங்கேற்று பேசும் போது மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட குழுவின் முயற்சியினை பெரிதும் பாராட்டினார். மேலும் திரு.மா.சண்முகசுந்தரம், பஞ்சாயத்து அலுவலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இக்கிராமத்தில் 19.03.2019 அன்று மாலை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் 20.03.2019 அன்று காலை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திரு. த.ரவிக்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இம்முகாமை ஒருங்கிணைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் செயலர் செல்வன் எஸ். கௌதம் நன்றியுரை ஆற்றினார்.