Latest News:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி 30.03.2019 அன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியில் சுமார் 250 மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வாசங்களான என் வாக்கு என் உரிமை, மனதில் உறுதி வேண்டும் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும், கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும் போன்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய (மாஸ்க்) முகமூடி அணிந்துக்கொண்டு தூத்துக்குடி ஆசிரியர் காலனியிலிருந்து தொடங்கி இந்த பேரணி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியானது “VOTE 100 %” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை டாக்டர். சிம்ரன்ஜித் சிங் உதவி ஆட்சியர், டாக்டர் அனு, பயிற்சி ஆட்சியர், தூத்துக்குடி அவர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் அவர் கூறுகையில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது தூத்துக்குடி மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது என மிகவும் பாராட்டி பேசினார். முதல்வர்(பொ). முனைவர் ப. வேலாயுதம் அவர்கள் மாணவ - மாணவிகளின் முயற்சியை மிகவும் பாராட்டினார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர் பேரவை துணை தலைவர் முனைவர் க. வீரபத்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. த.ரவிக்குமார், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.