Latest News:

WORKSHOP ON “VALUE ADDED FISHERY PRODUCTS”

The Department of Fish Processing Technology, Fisheries College and Research Institute, Thoothukudi conducted five days workshop on “Value added fishery products” from 19.08.2019 to 26.08.2019. A total of 15 students from St.Mary’s College participated in the workshop.  The programme was conducted by Dr.D.Sukumar, Professor and Head, Assistant Professors P.Ganesan, F. Parthiban, V.Vijayarahavan and Teaching Assistant A. Sarojini. Dr. P. Velayutham, Dean i/c., Fisheries College and Research Institute, Thoothukudi distributed the certificate to trainees on the valedictory day function.

 

மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பட்டறை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறைவு பெற்றது!


தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீனவளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பதன தொழில்நுட்பத் துறையில் “மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு” பற்றிய ஐந்து நாள் பயிற்சி பட்டறை 19.08.2019 முதல் 26.08.2019 வரை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியைச் சார்ந்த 15 மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை  துறைத்தலைவர் பேராசிரியர் து.சுகுமார் மற்றும் உதவி போராசிரியர்கள் பா. கணேசன், பா. பார்த்திபன், வி. விஐயராகவன் மற்றும் ஆசிரிய உதவியாளர் ஆ. சரோஜினி ஆகியோர் அளித்தனர். பயிற்சியின் நிறைவு நாளான இன்று (26.08.2019) கல்லூரியின் முதல்வர் ப. வேலாயுதம் அவர்கள் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அளித்தார்.