Latest News:

Farewell Party towards Superannuation Function Conducted at Fisheries College and Research Institute, Thoothukudi

Dr. M. Nagoor Meeran, Professor and Head, Department of Fisheries Extension, Economics and Statistics, Fisheries College and Research Institute, Thoothukudi has got superannuation on 31.10.2019. He has joined as Assistant Professor during 1984 at Tamil Nadu Agricultural University, Coimbatore. He has worked at Coimbatore and Kilikulam. Later he has worked at several centres located at Thanjhavur and Pudukottai functioning under Tamil Nadu Veterinary and Animal Sciences University. He also worked at Fisheries College and Research Institute, Thoothukudi functioning under Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University. Later he has worked as Director of Extension Education and Director, Institute of Fisheries Technology functioning under Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam. In three universities he has worked for a total service of 35 years and 2 months. The farewell party for superannuation of Dr. M. Nagoor Meeran has been organized at Fisheries College and Research Institute, Thoothukudi on 31.10.2019. Dr. P. Velayutham, Dean In-charge, presided over the function. In his presidential address, he has mentioned the great service rendered by Dr. M. Nagoor Meeran at various capacities in different places of the University. Dr. G. Jagatheesan, former Dean of this college gave Chief Guest address. Th. Nainar, Alumni of this college gave felicitation address. Professor, Associate Professor and Assistant Professor and Non-teaching staff attended this function. Dr. R. Santhakumar, Professor delivered welcome address. Dr. N. V. Sujathkumar proposed vote of thanks.

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் பணி ஓய்வு பாராட்டு விழா

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள விரிவாக்கம் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றிய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மு. நாகூர் மீரான் 31.10.2019 அன்று பணி மூப்பு பெற்றார். முனைவர் மு. நாகூர் மீரான், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் 1984ஆம் ஆண்டு சேர்ந்து கோயம்புத்தூர் மற்றும் கிள்ளிகுளம் போன்ற இடங்களில் பணியாற்றனர். மேலும் அவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் பல்வேறு அலகுகளில் தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் மொத்தம் 35 வருடம் 2 மாதங்கள் திறம்பட பணியாற்றினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் விரிவாக்க கல்வி இயக்குநர் மற்றும் மீன்வள தொழில் நுட்ப நிலையத்தின் இயக்குநராகவும் 5 வருடம் 5 மாதங்கள் பணியாற்றினார். அவர்களின் பணி மூப்பு விழா அன்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ப. வேலாயுதம் தலைமை உரையாற்றினார் அவர் தமது உரையில் முனைவர் மு. நாகூர் மீரான் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய சீரிய பணிகளை எடுத்துரைத்ததார். மேலும் அவரை கௌரவிக்கும் பொருட்டாக சால்வை அணிந்து வாழ்த்தினார். மேலும் இவ்விழாவில் இக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கு. ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவர் திரு. நயினார் போன்றோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் இக்கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் முனைவர் மு. நாகூர் மீரான் ஏற்புரை வழங்கினார். இவ்விழாவில் முனைவர் இரா. சாந்தகுமார், பேராசிரியர் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் ந.வ. சுஜாத்குமார், பேராசிரியர் நன்றியுரை ஆற்றினார்.