World Jelly fish day was celebrated on 4 th November, 2019 at Audio Visual Hall, Fisheries College and Research Institute, Thoothukudi. Dr. S. David Kingston, Professor and Head, Department of Fisheries Biology and Resource Management of this institute, organized the programme and welcomed gathering. Dr. P. Velayutham, Dean i/c, Fisheries College and Research Institute, Thoothukudi has given his Chief guest address and spoke about the importance of Jellyfish, distribution, abundance and utility. This programme was celebrated to give awareness among the public and students on the Importance of Jelly fish. Jelly fish evolved long back during the Cambrian period in the geological time scale. They have evolved before 500 million years ago (i.e) even before the evolution of dinosaurs. They are very important creature. They are soft, swift and colourful in nature and feed mainly on plankton. There are big size jelly fish with the medusa more than 15 meter in diameter has been reported. The tentacles are very long and more than 20 – 30 m in length. There are more than 2000 species of jelly fish in the world. Some species of jelly fish are beneficial and some are harmful for human beings and also having medicinal values for the effective cure for Arthritis, Hypertension, back pain, ulcers, softening, skin and improving digestion. Remedy for fatigue and increase memory. Jelly fish blooms are very common during monsoon and post monsoon seasons. They proliferate due to over production of nutrients, Overfishing, Climate change causes over production of jelly fish and produce bloom of fish intensity. There were 170 students and staff were participated in the awareness programme. Mr. R. Durairaja has delivered vote of thanks.
உலக ஜெல்லி மீன் தினம்
உலக ஜெல்லி மீன் தினம் நவம்பர் 4-ம் நாளன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஜெல்லி மீன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும். தூத்துக்குடியில் உள்ள மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக ஜெல்லி மீன் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரியில் அமைந்துள்ள யு.ஏ ஹாலில் மாலை 4.00 – 5.00 அளவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முனைவர் சா. டேவிட் கிங்ஸ்டன், பேராசிரியிர் மற்றும் தலைவர், மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மை துறை வரவேற்புரை வழங்கினார். மீன்வளக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பா. வேலாயுதம், வாழ்த்துறை வழங்கினார். முதுகலை மாணவி செல்வி. சிந்து மற்றும் மீன் வள சுற்றுச்சூழலியல் துறையின் தலைவர் முனைவர் ராணி, ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். ஜெல்லி மீன்களின் முக்கியத்துவம் மற்றும் பரிணாமம், உயிரியல் மற்றும் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இவ்வுயிரினங்கள் சுமார் 500 வருடங்களுக்கு முன்னதாகவே தோன்றியதாக கருதப்படுகிறது. அதாவது, டைனோசர் போன்ற ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்த காலங்களுக்கு முன்பே ஜெல்லி மீன்கள் இருந்ததாக ஆய்வுத் துறை தெரிவிக்கின்றன. இவ்வகை ஜெல்லி மீன் இனங்கள் ஜெல்லி போன்று மிகவும் மென்மையானதாகவும், அதிகவேகமாக நகரக்கூடியதாகவும் பல வண்ணங்களில் தோற்றமளிக்ககூடியவையாகவும் காணப்படுகின்றது. சுமார் 2000 - த்திற்கும் அதிகமான இனங்களை உள்ளடக்கியனவாகவும், பிரதானமாக மிதவை உயிரினங்களை உண்டே வாழ்கின்றன. இந்திய பெருங்கடலில் பெரிய ஜெல்லி மீன்கள் 15 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்டவையாகவும், இதன் விழுதுகள் 20 மீட்டர் முதல் 30 வரை நீளம் உடையதாகவும் உள்ளன. மேலும், மருத்துவ பயன்பாடுகளான பயன்கள் இவ்வகை ஜெல்லி மீன்களிடம் இருக்கிறது. அதாவது மனிதர்களிடத்தில் உள்ள எலும்பு தேய்மானம், உயர் இரத்த அழுத்தம், முதுகு வலி, செரிமானம் மற்றும் மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. ஜெல்லி மீன்களில் சில இனங்கள் மிகவும் பயனுள்ளதாகவும், சில நச்சுத்தன்மை உள்ளனவாகவும் அரியப்படுகிறது. ஜெல்லி மீன்கள் மிக வேகமாக எண்ணிக்கையில் அதிகரித்து படர்ந்து பல கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக செயல்படுகிறது. எனவே இதைப்பற்றிய அறிவு பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாகும். இறுதியாக தி.ரா.துரைராஜா, உதவிப்பேராசிரியர் மீன்வள உயிரியல் துறை நன்றி உரையாற்றினார். அத்துடன் விழா இனிதே நிறைவுப்பெற்றது.