A total of 16 students of B.Sc. (Fisheries), Agriculture and Forestry University, Nepal (Signed MOU with TNJFU during 2018) visited Fisheries College and Research Institute, Thoothukudi. This educational programme has been scheduled from 02.12.2019 to 06.12.2019 and the students were explained with the laboratories techniques and methods in Fisheries Sciences by all the HOD’s of this institute. Various Seafood Processing methods were also demonstrated at Seafood processing plants. The students were also visited fish landing centres and Mariculture Research Farm Facility, Tharuvaikulam. The activities of college, Farm and museum of this institute were also explained. The students were also visited the College of Fisheries Nautical Technology, Shore campus of this Institute and its activities were explained by the staff of the institute. The students were observed and gained knowledge on coastal aquaculture, marine aquaculture, fish landing and marketing of fish and fishery products. Dr. B. Sundaramoorthi, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi and Captain. Viswanathan, Dean, College of Fisheries Nautical Technology, Thoothukudi explained the institute activities to the students. Dr. R. Santhakumar, Professor, and Dr. G. Arul Oli, Assistant Professor, Dept. of Fisheries Extension, Economics and Statistics served as Co-ordinators.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு நேபாள நாட்டு மீன்வளப் பட்டப்படிப்பு மாணவர்களின் கல்வி சுற்றுலா
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் மற்றும் நேபாள நாட்டின் வேளாண் மற்றும் வனவியல் பல்கலைக்கழகமும் இணைந்து “2018ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நேபாள பல்கலைக்கழக பி.எஸ்.சி. மீன்வளப் பட்டப்படிப்பு நான்காம் ஆண்டு மாணவ மாணவியர்கள் மொத்தம் 16 பேர் தூத்துக்கடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கல்விச்சுற்றுலாவிற்காக வந்திருந்தனர். இக்கல்விச்சுற்றலா ஆனது 02.12.2019 முதல் 06.12.2019 வரை ஐந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்டது. மாணவர்களுக்கு கல்லூரியின் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகள் செயல்பாடுகள் போன்றவைகள் குறித்து அந்தந்த துறைத்தலைவர்கள் மூலம் விளக்கப்பட்டது. மேலும் பல்வேறு கடற்சார் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளின் பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி முறைகள் போன்றவைகள் செயல்முறை விளக்கத்துடன் கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மீன் இறங்குதள கூடங்கள் மற்றும் தருவைக்குளத்திலுள்ள கடற்சார் உயிரின ஆராய்ச்சி வளர்ப்பு பண்ணை வசதி கல்லூரியில் உள்ள பண்ணை முறைகள் மற்றும் அருங்காட்சியகம் போன்றவைகள் காண்பிக்கப்பட்டது. தூத்துக்குடி கடற்கரையோர வளாகத்தில் உள்ள மீன்வள மாலுமிக்கலை தொழில்நுட்பக் கல்லூரியின் அலுவலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரை அளித்தனர். நேபாள நாட்டு மாணவர்கள் இக்கல்விச் சுற்றலா மூலம் கடற்சார் வாழ் உயிரின வளர்ப்பு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மீன் இறங்கு தளத்தில் பிந்தைய அறுவரைட முறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவைகளில் தொழில்நுட்ப அறிவினைப் பெற்றனர். தூத்துக்குடியின் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப. சுந்தரமூர்த்தி மற்றும் தூத்துக்குடி மீன்வள மாலுமிக்கலை தொழில்;நுட்பக் கல்லூரியின் முதல்வர் மாலுமித்தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கவுரை அளித்தனர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் முனைவர் இரா. சாந்தகுமார் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர் கோ. அருள் ஒளி நேபாள நாட்டு மாணவர்களின் கல்விச் சுற்றுலாவினை ஒருங்கிணைத்து நடத்தினர்.