Latest News:

An awareness programme on Fisheries conservation and management was conducted at Fisheries College and Research Institute for the celebration of World Fisheries Day – 2021

An awareness programme on Conservation and Management of Fisheries was conducted on 20.11.2021 by the Fisheries College and Research Institute, Thoothukudi at Mariculture Research Farm Facility, Tharuvaikulam on the occasion of World Fisheries Day 2021. A total of 60 fisherfolk participated in this programme. Dr.G.Sugumar, Vice-Chancellor, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University served as Chief guest and in his address, he stressed the importance of sustainable fisheries management and celebration of World Fisheries Day. Dr. N. V. Sujathkumar, Dean i/c presided over this function and in his address, he highlighted the importance of sustainable fishing methods. Mr. T. Vijayaragavan, Assistant Director of Fisheries, Fisheries and Fishermen Welfare Department, Mrs. K. Kadodi, President, Tharvaikulam, Mr. T. Lourduraj, President Co-operative Society, Tharuvaikulam, Mr.A.Anthoniraj, President, Mechanised boat owners Association, Tharuvaikulam were also spoke on this occasion. Dr. R. Santhakumar, Professor and Head, Department of Fisheries Extension, Economics and Statistics and Mr. T. Ravikumar, Assistant Professor and Head, Department of Fishing Technology and Fisheries Engineering coordinated this programme. Dr. P. Padmavathy, Professor and Head, Department of Aquatic Environment Management, proposed the vote of thanks. Topics such as sashimi grade tuna processing, sustainable fishing methods, tuna resources and management and disaster management were taught to the participants.

 

 

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி அமைந்துள்ள தருவைக்குளத்தில் 20.11.2021 அன்று மீன்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கோ. சுகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் உலக மீன்வளதினத்தின் முக்கியத்துவம் மற்றும் வளங்குன்றா மீன்பிடிமேலாண்மையின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் முனைவர் ந.வ. சுஜாத்குமார்முதல்வர் (பொ) மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சிநிலையம் தூத்துக்குடிஅவர் தமது தலைமை உரையில் பொருப்பார்ந்த மீன்பிடிமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். திரு. தி. விஜயராகவன் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி திருமதி. கா. காடோடி தலைவர் தருவைக்குளம் ஊராட்சிமன்றம் திரு. தொ. லூர்துராஜ் தலைவர் கூட்டுறவுசங்கம் தருவைக்குளம் திரு. எ. அந்தோணிபன்னீர்தாஸ் தலைவர் விசைப்படகுசங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். முனைவர் இரா. சாந்தகுமார் பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்வளவிரிவாக்கம் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை மற்றும் திரு. த. ரவிக்குமார் உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் மீன்பிடிதொழில்நுட்பவியல் மற்றும் பொறியியல் துறை இந்நிகழ்ச்சியின ;ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். முனைவர் பா. பத்மாவதி பேராசிரியர் மற்றும் தலைவர் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஏறத்தாழ 60 மீன்வர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் இந்தவிழிப்புணர்வு முகாமில் சசிமிதரசூரைமீன் தயாரிப்புபற்றிமுனைவர் இரா. ஜெயசகிலாபேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்களும் வளங்குன்றா சூரைமீன் மீன்பிடிப்பு முறைகள் பற்றி திரு. ச. மாரியப்பன் உதவிப் பேராசிரியர் அவர்களும் கடற்புற்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பற்றி முனைவர் ப. பத்மாவதி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்களும் சூரைமீன் வளம் மற்றம் மேலாண்மை பற்றி திரு. ரா. துரைராஜா உதவிப் பேராசிரியர் அவர்களும் மற்றும் பேரிடர் மேலாண்மை முறைகள் பற்றி முனைவர் இரா. சாந்தகுமார் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அவர்களும் உரையாற்றினார்கள்.