The Students Association of Fisheries College and Research Institute, Thoothukudi organized the celebration of “Teachers Day” on 05.09.2022. Mr. C. George Rayvanth (III B.F.Sc.,) Joint Secretary, Students’ Association welcomed the gathering.
The Teacher’s Day poetry was offered by Miss. Rajeshweri, III B.F.Sc. Dr.S.Athithan, Vice-President, Students Association delivered the Teacher’s Day special note and the Vice-President address. Dr.R.Santhakumar, Dean i/c and President of Student’s Association presided over the function and delivered the presidential address in which he emphasized the dedication of the institute’s Professors. Mr.A.Anix Vivek Santhiya, Assistant Professor, Department of Aquaculture was selected as the Lucky Teacher and Lucky Corner of the day by spin wheel and Dr.R.Jeyashakila, Professor and Head, Department of Fish Quality Assurance and Management won a special prizes. Dean i/c distributed the prizes & certificate to the winners Lucky Teacher and Lucky Corner of the day. Mr. Balasingam, III B.F.Sc., proposed the vote of thanks. All students, teaching and non staff have attended and graced the celebration.
The entire programme was well organized by Dr.S.Athithan, Vice President of Students Association.
தூத்துக்குடி மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக “ஆசிரியர் தினம்” 05.09.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர் சங்கத்தின் இணைச்செயலாளர் செல்வன் சி.ஜார்ஜ் ரேவந்த் (மூன்றாம் ஆண்டு மாணவர்) அனைவரையும் வரவேற்றார். மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி ராஜேஸ்வரி ஆசிரியர் தினம் குறித்த கவிதை வாசித்தார்.
மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் சா.ஆதித்தன் அவர்கள் ஆசிரியர் தினத்தின் நோக்க உரை மற்றும் மாணவர் சங்கத்தின் சார்பாக துணைத்தலைவர் உரையை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா.சாந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கி நிறுவனப் பேராசிரியர்களின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தி தலைமையுரை ஆற்றினார். திரு. அனிக்ஸ் விவேக் சந்தியா உதவிப்பேராசிரியர் அவர்கள் ஸ்பின் வீல் மூலம் அன்றைய லக்கி டீச்சராகவும் முனைவர் இரா.ஜெயஷகிலா பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்கள் லக்கி கார்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசுகளை வென்றார்கள்.
மூன்றாம் ஆண்டு மாணவர் செல்வன் பாலசிங்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலாக்கள் திரளாக பங்கு கொண்டு சிறப்பித்தனர். முழு நிகழ்ச்சிகளையும் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் முனைவர் சா.ஆதித்தன் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்.