Latest News:

Orientation Programme for B.F.Sc 2022 - 2023 Batch

The orientation programme for the 2022-23 batch students of B.F.Sc programme was conducted at Fisheries College and Research Institute (FC&RI), Thoothukudi, a constituent unit of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam on 07.12.2022. This year a total of 49 students (15 boys and 34 girls) have been admitted for B.F.Sc. programme at Fisheries College and Research Institute, Thoothukudi through counselling process conducted early this month. The fresher’s were given rousing welcome by the second year B.F.Sc students at the college entrance gate with bouquet and sweets. They also guided the parents and their wards to the place of registration and hostels. The programme was initiated by Dr. B.Ahilan, Dean, who extended a warm welcome to parents and students. In his welcome address, he explained the over view of the college. Further, he added that the campus is free from ragging and if any form of ragging is felt by the students they can communicate with the anti ragging authorities. The speech was followed by session on academic rules and scholarships by Dr.S.Athithan, Student’s Co-ordinator. Dr.P.Padmavathy, Warden explained hostel rules and regulations, the Vice President of student association Dr. S.Athithan, Professor and Head detailed the college activities and achievements. Sports, NSS and Library activities were also explained by the faculty staff. Several parents actively interacted and clarified their doubts such as job opportunities, course details, fellowship and other facilities. Dr.C.Sudhan, the students counsellor proposed vote of thanks.

2022 - 2023 வருடத்திற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான வகுப்புகள் 07.12.022 அன்று துவங்கின

இவ்வாண்டிற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான வகுப்புகள் 07.12.2022 அன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது. இவ்வாண்டில் பொதுக் கலந்தாய்வு மூலமாக 49 புதிய மாணவர்கள் (15 ஆண்கள் மற்றும் 34 பெண்கள்) மீன்வளக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 07.12.2022 காலை நடைபெற்றது. மீன்வளக் கல்லூரி முதல்வர் முனைவர்; ப. அகிலன் விழாவிற்கு தலைமையேற்று அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்று கல்லூரி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் 2022-23 ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் ஆதித்தன் ஏற்பாடு செய்து தந்ததோடு கல்விமுறை விதிகள் பற்றியும் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளரும் பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் பா. பத்மாவதி மாணவர் விடுதியின் சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கினார். இக்கல்லூரியின் மாணவர் பேரவையின் துணைத்தலைவரும் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் ஆதித்தன் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் குறித்து பேசினார். அனைத்து புதிய மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெற்றோர்களுக்கான கேள்வி-பதில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்வமயம் பெற்றோர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. திரு.சுதன் உதவிப் பேராசிரியர் மற்றும் மாணவர் ஆலோசகர் நன்றி கூறினார்.