Latest News:

A one day training programme on “Compost preparation using fish solid wastes

A one day training programme on “Compost preparation using fish solid wastes" was organized by Department of Aquatic Environment Management, Fisheries College and Research Institute, Thoothukudi on 15.02.2023. A total of 32 students from St. Mary’s college, Thoothukudi and Sadakathullah Appa College, Tirunelveli participated the training. Dr.P.Padmavathy, Professor and Head, welcomed the gathering and discussed the necessity for fish solid waste management as well as the numerous procedures involved in creating compost utilising fish solid wastes. The importance of fish liquid fertiliser was explained by Dr. V.Rani, an associate professor. Dr.D.Manimekalai described the role of microbes in composting process. A live demonstration of making fish compost with sawdust and sugarcane bagasse was given. Certificates were given out to the participants in the valedictory programme. Dr.V.Rani, Associate Professor proposed vote of thanks. Dr.P.Padmavathy, Professor and Head and Dr.D.Manimekalai, Assistant Professor coordinated the programme.

மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் பற்றிய ஒரு நாள் பயிற்சி 15.02.2023 நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் தூத்துக்குடி.

தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறையால் 15.02.2023 அன்று “மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல்” பற்றிய ஒருநாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. செயின்ட் மேரீஸ் கல்லூரி தூத்துக்குடி மற்றும் சதக் அதுல்லா அப்பா கல்லூரி திருநெல்வேலி ஆகிய கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 32 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்தவகுப்பில் முனைவர். பா.பத்மாவதி கூட்டத்தை வரவேற்று மீன்கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். முனைவர் வே.ராணி இணைப்பேராசிரியர் மீன் திரவ உரம் தயாரித்தல் பற்றி விவரித்தார். முனைவர். து.மணிமேகலை உதவிபேராசிரியர் மீன்கழிவு உரம் தயாரிப்பதிலும் அதனை மேம்படுத்துவதிலும் நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி விளக்கி கூறினார். பின்னர் மரத்தூள் மற்றும் கரும்பு சக்கைகொண்டு மீன்கழிவு உரம் தயாரிப்பு பற்றிய செய்முறை விளக்கம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர். பா.அகிலன் அவர்கள் மீன் உரம் தயாரிப்பதின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முனைவர். வே.ராணி இணைப்பேராசிரியர் நன்றியரைவழங்கினார். முனைவர். பா.பத்மாவதி துறை தலைவைர் மற்றும் முனைவர். து.மணிமேகலை உதவிப் பேராசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்கள்.