Latest News:

Two Day Workshop on “Data Analytics using Statistical Software”

The Department of Fisheries Extension, Economics and Statistics of Fisheries College and Research Institute, Thoothukudi, has organised a Two Day Workshop on “Data Analytics using Statistical Software” from 15th to 16th February, 2023. The aim of the workshop is to provide a base knowledge to the faculty and the PG & Ph.D schoalrs on data analysis using MS Excel, SPSS and R-Studio. Dr. B.Ahilan, Dean, FC&RI, Thoothukudi inaugurated the programme on 15.02.2021 and highlighted the importance of the workshop. Dr.T.Umamaheswari, Dr. B. Manikandan and Mrs. V. Gomathy, Assistant Professors, Department of Fisheries Extension, Economics and Statistics, FC&RI, Thoothukudi took classes for this two-day Workshop. Hands on sessions on various aspects of statistical analysis (both Parametric and Non-parametric tests) with biological research data sets using MS Excel, SPSS and R-Studio were provided. A total of 37 participants from M. S. University, Sadakathullah Appa College, Tirunelveli, College of Fisheries Engineering, Nagapattinam, GVN College, Kovilpatti and FC&RI, Thoothukudi attended the workshop and got benefitted. Certificates were distributed to the participants by the Dean, FC&RI, Thoothukudi during the valedictory progarmme. Dr. B. Manikandan, Assistant Professor and Organizing Secretary, proposed the vote of thanks. Dr. N. V. Sujathkumar, Professor & Head, DFEES coordinated the workshop.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்; “புள்ளிவிவர மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு” என்ற இரண்டு நாள் பணிபட்டறை பயிற்சி (15.02.2023–16.02.2023) நடத்தப்பட்டது

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் 15 பிப்ரவரி 2023 முதல் 16 பிப்ரவரி 2023 வரை “புள்ளியியல் மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு" என்ற தலைப்பில் இரண்டு நாள் பணிபட்டறை நடத்தப்பட்டது. பட்டறையின் நோக்கம் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அடிப்படை புள்ளியியல் பகுப்பாய்வு அறிவை வழங்குவதாகும். எம்எஸ் எக்ஸல் எஸ்பிஎஸ்எஸ் மற்றும் ஆர் மென்பொருளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப.அகிலன் 15.02.2021 அன்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பயிலரங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த இரண்டு நாள் பயிலரங்கில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்வள விரிவாக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் த.உமாமகேஸ்வரி முனைவர் பூ.மணிகண்டன் மற்றும் திருமதி வி.கோமதி ஆகியோர் பயிற்சி வகுப்புகளை எடுத்தனர். எம்எஸ் எக்ஸல் எஸ்பிஎஸ்எஸ் மற்றும் ஆர் மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரியல் ஆராய்ச்சி தரவுத் தொகுப்புகளுடன் புள்ளிவிவரப் பகுப்பாய்வின் (அளவுரு மற்றும் அளவுரு அல்லாத சோதனைகள் இரண்டும்) பயிற்சிகள் வழங்கப்பட்டன. எம்.எஸ். பல்கலைக்கழகம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி மீன்வள பொறியியல் கல்லூரி நாகப்பட்டினம் ஜிவிஎன் கல்லூரி கோவில்பட்டி மற்றும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி போன்ற கல்லூரிகளிருந்து மொத்தம் 37 ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நிறைவு விழா நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மீன்வள விரிவாக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் உதவிப் பேராசிரியரும் அமைப்புச் செயலாளருமான முனைவர் பூ.மணிகண்டன் நன்றியுரை வழங்கினார். மீன்வள விரிவாக்கம் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந.வ.சுஜாத்குமார் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார்.