Latest News:

National Webinar on “Taxonomy: An Approach for Exploring Aquatic Biodiversity” (in commemoration of the World Taxonomist Appreciation Day)

The World Taxonomist Appreciation Day 2023 was organised at Fisheries College and Research Institute, Thoothukudi by the Department of Fisheries Biology and Resource Management. A total of 140 participants were participated in this programme. Mr. R. Durairaja, Assistant Professor, Dept. of Fisheries Biology and Resource Management welcomed the gathering. The Dr. B. Ahilan, Dean, delivered the presidential address and emphasized the importance of Taxonomy. A special lecture on "Principles of Taxonomy, Classical taxonomical methods" was given by Dr. V. K. Venkataramani, former Dean and Adjunct Professor. He described how the classification system used by the IUCN. Dr. A. Kathirvelpandian, Senior Scientist, ICAR- PMGFR, Kochi, delivered a special lecture on “Molecular Taxonomical Methods: Tools for Resolving Ambiguities in Taxonomy of Aquatic Organisms”. A special talk on "Taxonomy of Hitherto Neglected Sea Taxa" was given by Dr. R. Saravanan, Senior Scientist, Mandapam Regional Centre, ICAR - CMFRI. Mr. S. Asok kumar, Deputy Director, MPEDA, Sub-Regional Division, Thoothukudi, delivered a lecture on “Implications of Taxonomy in International Seafood Trade”.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் வகைபாட்டியலாளர்களின் ஊக்குவிப்புதினம் - 2023 நடத்தப்பட்டது

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் மீன் வகைபாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் 20.03.2023 அன்று தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கப்பட்டது. நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அழிந்துவரும் மீன் இனங்களைப் பற்றிய அறிவு பொது மக்களுக்கு மிக முக்கியமாகும். எனவே அவற்றைகாத்திட நாம் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டியது அவசியம். மேலும் மீன் வகைபாட்டியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே இது சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதன் அடிப்படையில் மீன்வளக் கல்லூரியில் மீன்வகைபாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் 20.03.2023 அன்று மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத்துறையால் நடத்தப்பட்டது. இவ்விழாவில் விஞ்ஞானிகள் கல்லூரி ஆசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 140 பேர் பங்கேற்றனர். விழாவில் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் திரு.ரா.துரைராஜா வரவேற்புரை வழங்கினார். பின்னர் கல்லூரி முதல்வர் முனைவர் ப. அகிலன்இ அவர்கள் தலைமையுரை வழங்கி சிறப்பித்தார். அவருடைய உரையில் மீன்வகைபாட்டியலின் முக்கியத்துவம் மற்றும் அதனை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மீன் வளக்கல்லூயின் முன்னாள் முதல்வரும் கௌரவ பேராசிரியருமான முனைவர் வை.கி.வெங்கடரமணி அவர்கள் “மீன் வகைப்பாட்டியியலின் கொள்கை மற்றும் அதனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கட்டுரையாளர்கள் பற்றிய விரிவான வரலாற்று கருத்துக்களை பதிவு செய்தார். முனைவர். ஆ. கதிர்வேல்பாண்டியன்இ முதுநிலை விஞ்ஞானி மீன் மரபணு வளங்களுக்கான தேசிய பணியகம் முனைவர். இரா. சரவணன் முதுநிலை விஞ்ஞானி மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மண்டபம் மேலும் திரு. எஸ்.அசோக் குமார் துணை இயக்குநர் கடல் சார் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் தூத்துக்குடி ஆகியோhர் சிறப்புரை ஆற்றினார்கள்.