Latest News:

Conducted a Training programme on Vannamei Shrimp Farming from 21.08.2023 to 23.08.2023

      The Mariculture Research Farm Facility, Department of Aquaculture, Fisheries College and Research Institute,Tharuvaikulam a constituent Institute of Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, organized and conducted a 3 days non-residential training programme on “Vannamei Shrimp Farming” from 21.08.2023 to 23.08.2023. In this training programme, a total of 40 participants (27 males and 13 females) have participated and got benefited.  The valedictory function for the training was held on 23.08.2023 and Dr.K.S.Vijay Amirtharaj, Assistant Professor and Head i/c, welcomed the gathering. Dr.N.V.Sujathkumar, Dean i/c, FC&RI, Tuticorin delivered the presidential address and explained the present status of vannamei farming in India and the adoption of Better Management Practices for sustainable and successful vannamei farming. He has also distributed the certificates to the participants and Dr.S.Athithan, Professor and Headproposed the vote of thanks.

 கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணைவசதிஇ தருவைக்குளத்தில்   “வனாமி இறால் வளர்ப்பு” குறித்து மூன்று நாள்; பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளத்தில் 21.08.2023 முதல் 23.08.2023 வரை “வனாமி இறால் வளர்ப்பு” குறித்த மூன்று நாள் பயிற்சி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 40 பயனாளிகள் (27ஆண்கள் மற்றும் 13 பெண்கள்) பயிற்சி பெற்றுபயனடைந்தனர். இப்பயிற்சியின் நிறைவுவிழா 23.08.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்சியில் முனைவர். க.சே. விஜய் அமிர்தராஜ் உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) அவர்கள் வரவேற்புரையை வழங்கி பயிற்சியாளர்களை வரவேற்றார். முனைவர் ந.வ.சுஜாத்குமார் முதல்வர் (பொ) மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தலைமை உரையாற்றினார். அவர் தம் உரையில் இந்தியாவில் இறால் உற்பத்திமற்றும் அதன் வாயிலாக பெறப்படும் வருவாய் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறுகையில் இறால் வளர்ப்பு சிறந்த லாபம் கொடுக்க கூடிய தொழில் என்றும் எடுத்துரைத்து பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிறைவு விழாவில் முனைவர் சா.ஆதித்தன் பேராசிரியர் மற்றும் தலைவர் நன்றியுரை ஆற்றினார்.