The Department of Aquaculture, Fisheries College and Research Institute, Tamil
Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, organized a one-day training session on
Ayirai Meen (Loach) fish farming on August 28, 2023. A total of 34 participants,
including two women from Tamil Nadu, took part in this training programme. Its primary
objective was to impart knowledge and raise awareness among the trainees about
Ayirai Meen (Loach) fish farming. The training included instruction in Ayirai Meen
(Loach) fish farming techniques, followed by on-farm demonstrations. Dr. B. Ahilan,
Dean, distributed certificates to the participants and emphasized the significance of this
training programme in motivating the aqua farming community to engage in Ayirai Meen
(Loach) fish farming. This programme is expected to enable trainees to embark on self-
employment by initiating their own farming ventures in inland areas. Dr. S.Athithan,
Professor and Head of this department conducted and coordinated the training
programme. For further information on Ayirai Meen (Loach) fish farming can be
obtained from Professor & Head, Department of Aquaculture, Fisheries College &
Research Institute, Thoothukudi - 628 008, Mobile number (09442288850), E-mail ID
(athithan@tnfu.ac.in)
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “அயிரை மீன் வளர்ப்பு" குறித்த ஒரு நாள் உள் வளாக மற்றும் இணையள பயிற்சி 28.08.2023 அன்று நடை பெற்றது.
தமிழ் நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறையில் “அயிரை மீன்” குறித்த ஒரு நாள் உள் வளாக
பயிற்சி 28.08.2023 அன்று நடை பெற்றது. இதில் தமிழ் நாட்டை சார்ந்த 34 பயனாளிகள் (2 மகளிர்
உட்பட) கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இப்பயிற்சியில் அயிரை மீன் வளர்ப்பு பண்ணை தொழில் நுட்பம் குறித்த விளக்க பாடங்களும்
செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள்
குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் சா.ஆதித்தன் விரிவாக எடுத்து கூறி
பயிற்சியை நடத்தினார்.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்
முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை
வழங்கினார். மேலும் தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் பொருளாதாரத்தில்
நலிந்த மீனவ சமுதாயத்திற்கு இப்பயிற்சியால் ஏற்படும் மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை
உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார்.
மேலும் “அயிரை மீன் வளர்ப்பு” பற்றிய விளக்கங்கள் அறிய பின் வரும் முகவரியை தொடர்பு
கொண்டு பயன் பெறவும். பேராசிரியர் மற்றும் தலைவர் மீன் வளர்ப்பு துறை மீன்வளக்
கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி - 628 008 அலை பேசி எண்
(09442288850) மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in