The Teachers' Day celebration 2023 of Fisheries College and Research Institute was conducted on 5th September 2023 at 4pm. Mr.Lampherrt. E.S (III B F.Sc.) welcomed the gathering and extented his greetings to all attendees. Ms.Percy (III B F.Sc.) recited a Tamil poem and Ms.Harita Krishnan (III B.F.Sc.) delivered a special speech on Teachers Day. Dr.N.V. Sujath Kumar, Dean i/c graced the occasion as Chief Guest and delivered the Chief Guest’s address and Dr.P.Padmavathy delivered the Vice-Presidential address. Game events were conducted for teachers and momentos were distributed to teachers. The cake cutting event symbolized the sweetness of bond between teachers and students. In conclusion,Mr.A.S.Gokula Krishnan (III B F.Sc.) delivered a vote of thanks , thanking the educators who shape not only careers but also the future.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா 05.09.2023 அன்று கொண்டாடப்பட்டது.
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் ஆசிரியர் தின விழா 05.09.2023 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் செல்வன் லம்பர்ட் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் வரவேற்புரை நிகழ்த்தினார். மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி பெர்சி தமிழ் கவிதையையும், செல்வி ஹரிதா கிருஷ்ணன் அவர்கள் ஆசிரியர் தின சிறப்புரையாற்றினார். முனைவர் ந.வ.சுஜாத்குமார் முதல்வர் (பொறுப்பு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்பு முனைவர் திருமதி.ப.பத்மாவதி மாணவர் சங்க பேரவைத் துணைத் தலைவர் தனது ஆசிரியர் தின உரையை வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் மூன்றாம் ஆண்டு மாணவர் செல்வன் ஆ.செ.கோகுல கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையை வழங்கினார்.