Department of Aquaculture, Fisheries College and Research Institute, Thoothukudi organized twodays training on “Freshwater Ornamental Fish Farming for Livelihood Improvement of Women”from February 27-28, 2024 funded by Department of Scientific and Industrial Research (DSIR) under the scheme on“Livelihood improvement of women through skill development in ornamental fish farming with special emphasis on production of attractive and high quality ornamental fishes”. The aim of this training programmeis to provide skill based training in ornamental fish culturewhich will pave way for self-employment of the trainees by starting their own farming practices.A total of 19 trainees from various places of Thoothukudiattended the programme. During this programme, details about commercially important ornamental fishes, their breeding behaviour, feeding, water quality and disease management, packaging and transportation of fishes and economics of ornamental farming were explained to participants. The participants were also taken on an exposure visit to the Davis Integrated Farm, Keeranoorso as to gain hands on knowledge in Ornamental Fish Culture and learn the onsite practices followed in ornamental fish farm. Dr.B. Ahilan, Dean distributed the certificates to the participants and interacted with the trainees to motivate them to start their venture in ornamental fish culture. Dr.C. Judith Betsy,Assistant Professor of this Department organized and coordinated the training programme.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கிவரும் மீன்வளர்ப்புத்துறையில் “பெண்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” பற்றிய 2 நாள் பயிற்சி 27.02.2024 முதல் 28.02.2024 வரை நடைபெற்றது. இப்பயிற்சியானது அறிவியல் மற்றும் தொழில்சார் ஆராய்ச்சி துறையால் “உயர்தர அலங்கார மீன்கள் உற்பத்தியின் மூலம் அலங்கார மீன் வளர்ப்பில் பெண்களின் வாழ்வதாரமேம்பாடு” என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 19பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சியில் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த விளக்கப்பாடங்களும் செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. முக்கிய அலங்கார மீன்கள் அவற்றின் இனப்பெருக்கம்இ நீர்தரப் பராமரிப்பு உயிர் உணவுகள்இ பொருளாதாரம் நோய்கள் மற்றும் குணப்படுத்தும் முறைகள அலங்கார மீன்களை பாதுகாப்பான முறையில் கொண்டுசெல்லும் வழிகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. கீரனூரில் உள்ள அலங்கார மீன்வளர்ப்பு பண்ணைக்கு களப்பயணம் மேற்கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் ப. அகிலன் அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடி இப்பயிற்சியின் வாயிலாக புதியஅலங்கார மீன்வளர்ப்பு பண்ணைகளை மேற்கொண்டு அதன்மூலம் பொருளாதாரத்தில் மேம்படவேண்டும் என்று ஊக்குவித்தார். முனைவர் சா. ஜுடித் பெட்ஸி உதவிப் பேராசிரியர் மீன்வளர்ப்புத்துறை அவர்கள் இப்பயிற்சியை ஒருங்கிணைத்து விரிவாக நடத்தினார்.