A special programme on Personality development and leadership skill for improving the self confident and work efficiency for the postgraduate students was conducted at Fisheries College and Research Institute, Thoothukudi on 22-11-2018. Mr.R.Veerabadhran, Students Coordinator, Pearlcity Academy on Leadership and Management Skills (PALMS), Thoothukudi was the special trainer who conducted a very useful and interactive session on personality development and leadership skills which are essentially required for the students for improving the self-confident. Dr. N.V. Sujathkumar, Dean i/c., FC&RI, Thoothukudi presided over the programme. A total of 43 students participated and get benefitted through this special programme.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுகலை மாணவ மாணவிகளுக்கான ஆளுமை வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவது பற்றிய பயிற்சி
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதுகலை மாணவ மாணவிகளுக்கான “ஆளுமை வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பயிற்சி 22-11-2018-ல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர். ந.வ.சுஜாத்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தூத்துக்குடியில் உள்ள பார்ம்ஸ் நிறுவனத்தின் மாணவ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.ர்.வீரபத்திரன் பயிற்றுனாரக பங்கு பெற்றார். ஆளுமை வளர்ச்சி மற்றும் தலைமைத்துவ திறன் பயிற்சி மூலமாக தன்னம்பிக்கையை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்று விரிவான பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் மொத்தம் 43 முதுகலை மாணவ மாணவிகள் முழு ஆர்வத்துடன் பங்கு பெற்று பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாய் தெரிவித்தனர்.