நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாக கட்டிடத்தில் 72-வது சுதந்திர தின விழாவானது ஆகஸ்ட் 15, 2018 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணை வேந்தர் முனைவர் சுக பெலிக்ஸ் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினார். அவரது சுதந்திர தின உரையில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை பிரச்சனை, வறுமை மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளில் தங்களது ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். மேலும், அவர் உரையில் பிரதம மந்திரி திட்டங்களான சுத்தமான வளாகம், பசுமை வளாகம் மற்றும் பணமில்லா பரிவர்தனை அவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு இப்பல்கலைகழத்தால் எடுக்கப்படுள்ள முயற்சிகளை இப்பல்கலைக்கழத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தீவிரமாக நடைமுறைபடுத்துமாறு அனைத்து பல்கலைக்கழக அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொண்டார். மீன்வளத்துறைகளில் தேவைப்படும் திறன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் பொருட்டு பல்கலைக்கழ நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் மூலம், இளங்கலை உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை படிப்புகள் ஆகியவற்றைத் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெறிவித்தார். மீன்வள பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான தகுதியை மேம்படுத்தும் பொருட்டு பல்கலைகழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களை தயார்படுத்தும் திட்டத்தை முறையாக பயன்படுத்தி சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார். துணை வேந்தரின் உரையை தொடர்ந்து "சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலைமை" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருதினை துணை வேந்தர் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். டி. பேபியோலா, உதவி பேராசிரியர், மீன்வள பொறியியல் கல்லூரி நன்றி உரையாற்றினார். பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 250 க்கும் அதிகமானோர் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். முனைவர் சி. பாலசுப்ரமணியன், முதல்வர், மீன்வள பொறியியல் கல்லூரி இவ்விழாவினை ஒருங்கிணைத்தார்.