"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

உள்நாட்டு மீன்வளம்

 

தமிழக உள்நாட்டு நீர் நிலைகள் பெரு நீர்க்தேக்கங்கள், சிறிய பெரிய பாசனக் குளங்கள் நீண்டகால மற்றும் பருவகால குளம், குட்டைகள் ஆகியவை ஒருங்கிணைந்த 3.71 இலட்சம் எக்டர் நீர்ப்பரப்பளவைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், 7,400 கி.மீ. நீளமுள்ள நதிகள் மற்றும் கால்வாய்கள் மீன்வளர்ப்புக்கு நல்ல நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கூட்டின மீன்வளர்ப்பு நன்னீர்  இறால் வளர்ப்பு மற்றம் அலங்கார மீன் உற்பத்தி மற்றும் வளர்ப்பு ஆகியவற்றை மீன்வளர்ப்போரிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு மீன்வள ஆதாரம் 4.50 இலட்சம் மெட்ரிக் டன்கள். இருப்பினும், தற்போதைய மீன் உற்பத்தி 1.15 இலட்சம் மெட்ரிக் டன்கள் உள்ளது. மீனவர்களின் எண்ணிக்கையானது 2,000,45 ஆகும். இது மொத்த மீனவர் தொகையில் 20.56 விழுக்காடு ஆகும். உள்நாட்டு மீன்உற்பத்தி இனவாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது (உள்நாட்டு மீன் உற்பத்தி 2004 – 05).

இந்தியக்கெண்டைகள்

  கட்லா – 119.78 டன்கள்
  ரோகு – 64.41 டன்கள்
  மீர் கால் – 51.29 டன்கள்

வெளிநாட்டுக் கெண்டைகள்

 சாதாக்கெண்டை – 14.95 டன்கள்

மற்ற கெண்டைகள்

  கல்பாசு – 22.15 டன்கள்
  திலேபியா – 228.44 டன்கள்
  கோபியஸ் – 1.66 டன்கள்
  மற்றவை – 71546.43 டன்கள்
  உவர் நீர்  மீன்கள் – 8400.00 டன்கள்
  இறால் – 6402.00 டன்கள்

மொத்தம் 86851.13 டன்கள்

உள்நாட்டு மீன் உற்பத்தியின் குறுக்கு மற்றும் நெடுக்கான சோதனைகளில் நீர்த்தேக்கம் மற்றும் பெரும்பாசன குளங்கள் மிகஅதிக வளத்தை பெற்றுள்ளது தெளிவாகிறது. எவ்கெங்கு இயலுமோ, அங்கெல்லாம் நவீன அறிவியல் நீர் வாழின வளப்பினை மேற்கொண்டு உள்நாட்டு மீன் உற்பத்தி அதிகாpக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது மீன் உற்பத்தியை பெருக்கவும், அதன் மூலம் உள்நாட்டு மீனவர்களுக்கு வருவய் அதிகரிக்கவும் உறுதி செய்யும். தமிழ்நாட்டில் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் நிலையங்கள் உள்ளன. இவற்றில் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மீன்குஞ்சு வளர்த்தெடுக்கும் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதுடன், தனியாரும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர இத்துறையின் கட்டுப்பாட்டில் 52,000 எக்டர் பரப்பளவு கொண்ட 52 நீர் த்தேக்கங்கள் உள்ளன. உள்நாட்டு நீர் நிலைகளில் விஞ்ஞானரிதியில் மீன்வளர்ப்பினை மேற்கொண்டு மீன் உற்பத்தியினை அதிக்கச் செய்து இத்திட்டத்தை விர்pவுபடுத்தலே மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் பொதுவான நோக்கமாகும். தற்சமயம் 12 மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமைகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் இம்மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. மீன் வளர்க்க விரும்பும் பயனாளிகளுக்கு மீன்வளர்ப்பு முறை பற்றிய பயிற்சி அளித்தல், குளங்களை குத்தகைக்கு எடுப்பது முதல் மீன் வளர் த்து அறுவடை செய்வது வரை தொழில் நுட்ப வழிகாட்டுதல்களை அளித்தல் ஆகியவை இம்முகமையின் மூலம் செயலாக்கப்படுகின்றன.

நீர்த்தேக்க மீன்வள வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை திட்டத்தின் மூலம் விஞ்ஞான முறையில் பொpய, நடுத்தர மற்றும் சிறிய நீர் த்தேக்கங்கள், நீர் நிலைகளில் மீன்வளத்தினை பெருக்குதல், உற்பத்தி செய்யப்பட்ட மீன்களை அறுவடை செய்யத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், அறுவடைக்குப் பின் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மீன்வளர்ப்போர் கெண்டை மீன்களுடன் அதிக அளவில் ஆதாயம் தரும் மீன் வகையான நன்னீர் இறால்களையும் ஒருங்கிணைத்து வளர்த்து அதிக லாபத்தினை பெற்றிட வழிவகை செய்திட மீன்வளர்ப்புக் குளங்களில் மீன்களுடன் நன்னீர் இறால் ஒருங்கிணைத்து வளர்த்தல் திட்டம் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

அலங்கார மீன்வளர்ப்பு சமீப காலமாக மிகப் பெரும் அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. எவ்கெங்கு நன்னீர் வள ஆதாரங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் அலங்காரமீன் வளர்ப்பிற்கு நல்ல எதிர் காலம் உள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்புகளில் அலங்கார மீன்வளர்ப்பிற்கும் உற்பத்திக்கு நல்ல எதிர் காலம் உள்ளது. சென்னையிலுள்ள கொளத்தூர் என்ற கிராமத்தில் சுமாh  750 வீடுகள் அலங்கார மீன் உற்பத்தியினை குடிசைத் தொழிலாக செய்து வருகின்றன. ஆனால் மீன் பண்ணையாளா களின் தொழில் நுட்பம் துவக்க நிலையில்தான் உள்ளது. இத்தொழில் நுட்பம் மேலும் உயர்த்தப்பட்டால், மீன்பண்ணையாளர்கள் அளவு பயனபெறுவார் கள்.

இவ்வாறு உள்நாட்டு மீன்வளம் பரந்து விரிந்து காணப்பபடுகின்ற நமது மாநிலத்தில் முறையான மீன்வளர்ப்பு முறைகளையும் மேலாண்முறைகளையும், பயன்படுத்தி மீன்வளத்தைப் பெருக்க நல்ல வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 

Conference Alert

News & Events

  • MoU Signed Between TNJFU and M/s. VEE AAR Industries
    Read More >>
  • Visit to Chengam, Erode and Bhavanisagar CeSA
    Read More >>
  • Inauguration of Skill Development Training Programmes
    Read More >>
  • 80th Independence Day Celebration at TNJFU, Nagapattinam
    Read More >>
  • Inauguration of Seabass Breedig and Hatchery related Facilities at Mandapam CeSA
    Read More >>