"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Email Login

info@tnjfu.ac.in

வளர்ப்புக்கேற்ற மீனினங்கள்

 

தமிழ் நாட்டின் மொத்த நீர்ப்பரப்பு 3.63 லட்சம் எக்டர் ஆகும். இதில் 2.24 லட்சம் பரப்பளவிற்கு குளங்களும், குட்டைகளும், அமைந்துள்ளன. நம்நாட்டில் நன்னீர் மீன் உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சி கூட்டு மீன் வளர்ப்பினால் ஏற்பட்டதாகும். வெவ்வேறான உணவுப் பழக்கங்களையும் வேகமான வளர்ச்சியையும் கொண்ட பல்வேறு வகையான கெண்டைமீன்களை ஒரே குளத்தில் ஒரே சமயத்தில் வளர்ப்பது கூட்டு மீன் வளர்ப்பாகும். இம்முறையில் பயன்படுத்தப்படும் ஆறு மீனினங்களில், நம் நாட்டுக் கெண்டைகள் மூன்றும் மற்ற வெளிநாட்டுக் கெண்டைகள் மூன்றும் ஆகும். கூட்டு மீன் வளர்ப்பில் நீரின் மேல் மட்டத்திலுள்ள தாவர உணவுகளையும், நடுமட்டத்திலுள் பிராணி மிதவை உணவுகளையும் மற்றும் அடிமட்டப் பகுதிகளில் உள்ள மக்கிய உணவையும் உண்பதற்கென இம் மீன்கள் பயன்படுகின்றன.         

கட்லா

நம் நாட்டுக் கெண்டைகளில் முக்கியமான ஒன்று கட்லாக் கெண்டையாகும். இதனைத் தமிழில் தோப்பா மீன் என்றழைக்கிறோம். இந்திய கெண்டைகளில் மிக வேகமாக வளரும் மீனினம் இதுவாகும். 

இம்மீன் பெரிய  தலையையும், அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடலின் மேற்பகுதி, சாம்பல் கலந்த வெண்மையும், கீழ்ப் பகுதி வெண்மையாகவும் காணப்படும்.நீரின் மேற்பரப்பில் உள்ள விலங்கின நுண்ணுயிர் மிதவைகளை உண்பதற்கேற்ப அதன் வாய் மேல் நோக்கி அமைந்துள்ளது. இம்மீன் கணுக்காலிகள், பாசிகள், ரோட்டிபர்கள், ப்ரோட்டோஸோவா, மக்கிய பொருட்கள் மற்றும் சேற்றையும் உண்கின்றன. கங்கை நதிக் கெண்டைகளில், வளர்ச்சி வேகத்தில் கட்லா கெண்டை முதலிடம் வகிக்கிறது. மேலும் வளர்ப்பு முறையில் ஓர் ஆண்டில் 1 முதல் 2 கிலோ எடை வரை வளரும்; திறனுடையது. இக்கெண்டையின் அதிக நீளம் 5 அடியும், அதிக எடை 40 கிலோவுமாகும். மீன்களின் இரும்பு அடர்த்தியை, கிடைக்கும் உணவுக்கேற்ப முறையாக வைத்துக் கொண்டால் இம்மீன்கள் நல்ல வளர்ச்சியைப் பெறும். தோப்பாக் கெண்டை மற்ற வேக வளர்ச்சிக் கெண்டைகளைப் போல இரண்டாவது வயது முடிவில் இனவிருத்திக்குத் தயாராகின்றது. உணவின் அளவையும், திறனையும் மற்றும் தட்பவெப்ப நிலையையும் பொறுத்து இம்மீன் பருவ முதிர்ச்சி அடைகிறது. கட்லா கெண்டைகள் குளம், குட்டைகளில் இயற்கையாக இனப்பெருக்கம் செய்யாது. ஏனவே தூண்டு முறை இனப்பெருக்கத்தின் மூலமே இம்மீன்கள் இனவிருத்தி செய்யப்படுகிறது.

ரோகு
இயற்கைச் சூழ்நிலைகளில் வேகமாக வளரும் கெண்டை ரோகுக் கெண்டைதான். கெண்டை வகைளில் உண்பதற்கு மிகச் சுவையானது. கூட்டு மீன் வளர்ப்பில் இம்மீன் முக்கியமானது.

ரோகுக் கெண்டை, குளங்களின் மேற்பரப்புக்கும், அடிப்பரப்புக்கும் இடையிலுள்ள நடு மட்டத்தில் உற்பத்தியாகும் உணவை உண்ணும். இது அடிப்பகுதியில் கிடைக்கும் தாவர மற்றும் பிராணி உணவுப் பொருட்களையும் உணவாகக் கொள்கின்றது. பொதுவாக, ரோகுக் கெண்டை நீhpன் மேற்பரப்பிலோ அல்லது அடிப்பரப்பிலோ உள்ள மீன்களோடு உணவுக்காக போட்டியிடுவதில்லை. ரோகுக் கெண்டை சிறிய தலையைப் பெற்றது, பெரிய ரோகு மீனின் செதில்கள் கருஞ்சிவப்பு நிறம் பெற்றிருக்கும். ஆண்டொன்றிற்கு 1 முதல் 1.5 கிலோ எடை வரை வளரும். ரோகுக் கெண்டை, மூன்றடி நீளமும் முப்பது கிலோ வரையும் வளரக்கூடியது. குளங்களில் வளர்க்கப்படும் ரோகு மீன் இரண்டாவது வயது முடியும் போது இனப்பெருக்கத்திற்குத் தயாராகும். ரோகு மீனும், கட்லா மீனைப் போல குளம், குட்டைகளில் இயற்கையான இனப்பெருக்கம் செய்வதில்லை.

மிர்கால்
நீரின் அடிமட்டத்தில் வாழும் இரண்டு வகை மீன்களில் ஒன்றே நம் நாட்டு வேக வளா;ச்சிக் கெண்டையான மிர்கால் கெண்டையாகும். இதன் அறிவியல் பெயா; சிர்ரேனஸ் மிர்காலா என்பதாகும். மிர்கால் கெண்டையின் தலையின் நுனிப்பாகம் தட்டையாகவும், வாய் விளிம்பு வட்ட வடிவமாகவும் உள்ளன. அகலமான இதன் வாயில் மேலுதட்டில் மடிப்பு உள்ளது. மேல் நாடியில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சிறிய உணர்விழைகள் உள்ளன.

மிர்கால் குஞ்சுகள் ஒரளவு வளர்ந்த பின்னர் பல்வேறு வகை உணவு வகைகளையும் உண்ணுகின்றன. உதாரணமாக, நுண்ணுயிர் மிதவைப் பாசிகள்   இழைப்பாசிகள், மக்கிய தாவரங்கள,; நுண்ணிய மிதவைப் பிராணிகள், மணல் மற்றும் சேறு ஆகியனவையாகும். மிர்கால் கெண்டைகள், சமவிகிதத்தில் கலந்திருக்கும் தவிடு மற்றும் புண்ணாக்கை விரும்பி உண்கின்றன. மிர்கால் கெண்டை 1 முதல் 1.5 கிலோ எடையை ஒருவருடத்தில் அடைகிறது. கட்லா, ரோகு மற்றும் மிர்கால் கெண்டைகளில் இனவிருத்திக்காலம், மழைக் காலத்தைப் பொறுத்தது. பொதுவாக, தென்மேற்குப் பருவமழைக் காலத்திலேயே அதாவது ஜூலை, முதல் செப்டம்பர் மாதங்களில் இவை இனவிருத்தி செய்கின்றன. தரமான இனக்கலப்பற்ற மீன் குஞ்சுகளைப் பெற, தூண்டு முறையில் இக்காலங்களில் இனவிருத்தி செய்யப்படுகின்றன. இந்த மூன்று கெண்டை மீன்களிலிருந்தும் மீன் குஞ்சு உற்பத்தி செய்ய தூண்டுதல் இனவிருத்தி முறையே பயன்படுத்தப்பட்டு;வருகிறது.

வெள்ளிக் கெண்டை

தீவிர மீன் வளர்ப்பில் பயன்படுத்த வேண்டிய வேக வளர்ச்சிக் கெண்டைமீன்களில், வெள்ளிக் கெண்டையும் ஒன்றாகும். இக்கெண்டையின் தலைப்பாகம் உருண்டு கூர்மையாகவும் சற்று நீண்டும் காணப்படும். இம்மீனின் செதில்கள் சிறியவை. இவை வெள்ளியைப் போன்று வெண்மை நிறம் கொண்டிருக்கும்.

வெள்ளிக் கெண்டை, நீரின் மேல் மட்டத்தில் உள்ள நுண்ணுயிர்த் தாவர மிதவைகளை விரும்பியுண்ணும். சிறிய மற்றும் முழு வளர்ச்சி அடைந்த வெள்ளிக் கெண்டை, பாசிகளையும், ப்ளஜெல் லேட்களையும், புரோட்டோஸோவா, ரோடிபா;ஸ், பேஸல்லேரியோபைசியே மற்றும் மிக்ஸோபைசியே இளப்பாசிகளையும் உண்ணும். வெள்ளிக்கெண்டை, நுண்ணுயிர்த் தாவர மிதவை உணவை உண்ண ஆரம்பித்ததும், அதன் உணவுக்குழாய் நீண்டு வளர ஆரம்பிக்கின்றது. 

  இம்மீனின் உணவுக் குழாயில் காணப்படும் சிறப்பைப்போல அதன் செவுள்களும் மிக நுணுக்கமுள்ள அதிகமாக செவுள் இழைகளை  கொண்டதால் நுண்ணிய தாவர மிதவைகளையும் வடிகட்டி உண்கிறது. நன்னீர்க் குளங்களில் வளர்க்கப்படும் எந்த மீனையும்விட வெள்ளிக் கெண்டை மீனே மிகச் சிறப்பாக வளர்கிறது. இதற்கு காரணம் நுண்ணுயிர்த் தாவர மிதவைகளை விரும்பியுண்ணும் உணவுப் பழக்கமாகும். குளங்களில் காணப்படும் இயற்கை மீனுணவில் பெருமளவானது தாவரப் பொருட்களே என்பதால் வௌ;ளிக்கெண்டை ஆண்டிற்கு 1.5 முதல் 2 கிலோ எடை வரை வளரும் தன்மைகொண்டது.

புல் கெண்டை

புல்கெண்டை, புரத உற்பத்தி மட்டுமின்றி, களைகளை கட்டுப்படுத்தவும், உரமிடும் இயந்திரமாகவும் பயன்படுகிறது. இம்மீன் சீனாவிலிருந்து நம் நாட்டுக்கு முதன்முதலாக 1959-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புல்கெண்டை நீண்ட உடலையும், கீழ்நாடியை விட சற்று நீண்ட மேல்நாடியையும் கொண்டது. உடலின் மேல் பகுதி சாம்பல் கலந்த பச்சை நிறமாகவும், வயிற்றின் அடிப்பாகம் வெண்ணிறமாகவும் இருக்கும். 30மி.மீ. நீளம் வரை வளர்ந்த புல்கெண்டை முழவதுமாக தாவர உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

மற்றக் கெண்டைகளைப்போல் புல்கெண்டைகளுக்கு பற்கள் இல்லாவிட்டாலும், புல்லை அறைப்பதற்கான பற்கள் உள்ளன. இம்மீனின் உணவு பாதையின் நீளம் குறைவானது. புல்லுண்ணும் கெண்டை நீரிலுள்ள வேலம்பாசி போன்ற நீர்த் தாவரங்களையும் பசுந்தீவனப்புல் இனங்களையும் விரும்பி உண்டு வளர்கின்றது. தன் எடையை விடப் பன்மடங்கு தாவரங்களை உட்கொள்வதால் இதன் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது.  

  ஒரு வருடத்தில் நன்கு உணவிட்ட குளங்களில் நாளொன்றுக்கு 1 செ.மீ. நீளம் வரை வளரும். மீன் பண்ணைகளில் ஒரு வருடத்தில் புல்கெண்டை மீன் தன்னுடைய உடல் எடையைப் போன்று எட்டு மடங்கு எடையுள்ள உணவை தினமும் உண்ணும் திறனுடையது. நமது நாட்டில் நன்கு வளர்ந்த ஆண் கெண்டைகள் மீன்கள் 2-வது ஆண்டிலும் பெண் கெண்டைகள் 3-வது ஆண்டிலும் இன முதிர்ச்சியடைகின்றன. பொதுவாக ஜூன் மாதம் ஆண் மீன்கள் இன முதிர்ச்சியடைகின்றன. மற்ற வேக வளர்ச்சிக் கெண்டைகளைப் போல புல்கெண்டையும் வளர்ப்புக் குளங்களில் இனப்பெருக்கம் செய்வதில்லை. எனவே, ஆண், பெண் புல்கெண்டைகள் பருவ முதிர்ச்சி பெற்றதும் பாலுணார்ச்சியைத் தூண்டும் கொனடோட்ரோபிக் ஹார்மோனைச் செலுத்தி, அவற்றை முட்டையிடச் செய்து இனப்பெருக்கம் செய்ய வேண்டும். 

சாதாக் கெண்டை

வளர்ப்பு மீன்களில் எத்தனையே இனங்கள் இருப்பினும், அவற்றுள் பல குணாதிசியங்களைக் கொண்டது சாதாக் கெண்டைதான். இவற்றில் மூன்று வகைகள் உள்ளன. அவை செதிள் கெண்டை, கண்ணாடிக்கெண்டை மற்றும் தோல்கெண்டை என்பவை ஆகும். நன்னீரில் அதிக உற்பத்திக்காக வளர்ப்பதற்கேற்ற மீன்களில் சாதாக் கெண்டையும் ஒன்றாகும்.

எந்த உணவையும் உண்பது, வேகமாக வளர்வது, கார அமிலத் தன்மையைத் தாங்குவது, ஓரளவு மிருதுவான உடம்பு மற்றும் உருண்டு திரண்ட அடிவயிறு, போன்றவை இம்மீனின் வேக வளர்ச்சித் திறனை காட்டும், இம்மீன் நன்னீரில் மட்டுமின்றி, ஓரளவு உப்பு நீரிலும் வளரக் கூடியது. சாதாக்கெண்டையின் உடல் தோற்றம் மற்ற வேக வளரிச்சிக் கெண்டைகளோடு ஒப்பிடும்போது மாறுபட்டது. இதன் மேல் உதட்டில் நீளமான இரண்டு தசையிழைத்தாடிகளும், இரண்டு சிறிய தசையிழைத்தாடிகளும் உள்ளன. உடல் பருமனுக்கேற்ற நீளமற்ற உடலையும், பெரிய  தலையும், வால்ப்பகுதியின் முன் துண்டாகத் தேரியும் காம்பையும் கொண்டது. இக்கெண்டை குளங்களில் மிகஎளிதில் இனப்பெருக்கம் செய்யும். சாதாக்கெண்டையின் இனமுதிர்ச்சியடைவது நாட்டில் காணப்படும் வெப்ப நிலையைப் பொறுத்துள்ளது. நமது நாட்டில் 6 முதல் 21 மாதங்களில் எளிதில் இனப்பெருக்கம் செய்யும். 

நமது நாட்டுத் தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கி வேகமாக வளா;ந்து அதிக மகசூலைத் தரும் மீன்கள்தான் வளர்ப்பிற்குச் சிறந்தது ஆகும். எனவே நவீன மீன் வளர்ப்பு முறையில் கிடைக்கக்கூடிய உணவுகளை உண்டு போட்டியிடாமல் வேகமாக வளரக் கூடிய மீன்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் மீன்கள் தாவர, விலங்கின நுண்ணுயிர்களை உண்ணக்கூடியவைகளாக இருக்கவேண்டும். மேலும் வேக வளர்ச்சியுடையதாக இருக்க வேண்டும், இந்த காரணங்களால் இந்திய கெண்டை மீனினங்களான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் அயல்நாட்டு மீன்களானவெள்ளிக் கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக்கெண்டை மீன்கள் நன்னீர்மீன் வளர்ப்பிற்கு ஏற்ற மீன்களாகும்.

Conference Alert

News & Events

  • MoU Signed Between TNJFU and M/s. VEE AAR Industries
    Read More >>
  • Visit to Chengam, Erode and Bhavanisagar CeSA
    Read More >>
  • Inauguration of Skill Development Training Programmes
    Read More >>
  • 80th Independence Day Celebration at TNJFU, Nagapattinam
    Read More >>
  • Inauguration of Seabass Breedig and Hatchery related Facilities at Mandapam CeSA
    Read More >>